சப்பாத்தி வகையில் வாழைப்பழத்தை பயன்படுத்தி வாழைப்பழ சப்பாத்தி எப்படி செய்வது என்று பார்ப்போம்..
தேவையானப் பொருட்கள் :
கோதுமை மாவு - 2 கப்
வாழைப்பழம் - 2
தேன் - 2 டேபிள் ஸ்பு+ன்,
உப்பு - 2 சிட்டிகை
நெய் - 4 ஸ்பு+ன்
எண்ணெய், நெய் கலவை - தேவையான அளவு.
செய்முறை :
வாழைப்பழ சப்பாத்தி செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் வாழைப்பழத்தைப் போட்டு நன்கு மசித்து, அதனுடன் கோதுமை மாவு, தேன், உப்பு, நெய் ஆகிய அனைத்தையும் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
பிசைந்த மாவை ஒரு அரை மணி நேரம் கழித்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தேய்த்துக்கொள்ளவும்.
பின்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை ஒவ்வொன்றாகப் போட்டு, எண்ணெய், நெய் கலைவையை சுற்றிலும் விட்டு, இருபுறமும் வேக வைத்து எடுத்தால் சுவையான https://t.me/MSRIGroupsUT வாழைப்பழ சப்பாத்தி ரெடி.