அனைவருக்கும் பிடித்த பிரெட் போண்டா ரெசிபி

Apr 13, 2018, 14:12 PM IST
போண்டா என்றாலே அனைவருக்கும் பிடிக்கும் அதிலும் பிரெட்டில் போண்டா என்றால் அது ஒரு தனி சுவை தான்.. சரி, பிரெட் போண்டா எப்படி செய்றதுனு பாப்போம்..
தேவையான பொருட்கள்:
பிரெட் - 12
காரட் - 50 கிராம்
உருளைக்கிழங்கு - 50 கிராம்
பீன்ஸ் - 50 கிராம்
பெரிய வெங்காயம் - 5
கரம் மசாலா தூள் - 1 டேபிள் ஸ்பூன் 
மிளகாய்த் தூள் - 1 டேபிள் ஸ்பூன் 
தனியா தூள் - 2 டேபிள் ஸ்பூன் 
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன் 
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன் 
உப்பு - தேவைக்கேற்ப
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் 
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை :
பெரிய வெங்காயம், காரட் மற்றும் பீன்ஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வேக வைத்த உருளைக்கிழங்கை தோலுரித்து கட்டியில்லாமல் நன்கு மசித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கி, இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
பிறகு காரட் மற்றும் பீன்ஸ் போட்டு வதக்கி, அரை கப் தண்ணீர் தௌpத்து கிளறிவிட்டு ஒரு தட்டை வைத்து 10 நிமிடங்களுக்கு மூடி வேக வைக்கவும்.
காய் வெந்ததும் மிளகாய்த்; தூள், மஞ்சள் தூள், தனியா தூள், உப்பு போட்டு கிளறிவிடவும். மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு கிளறி, கரம் மசாலா தூள் சேர்த்து கிளறிவிடவும்.
காய்களும், மசாலாவும் உருளைக்கிழங்குடன் ஒன்றாக சேர்ந்து கெட்டியாக ஆனதும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கிவிடவும். கடைசியாக எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
பிரெட்டின்; ஓரங்களை நீக்கிவிட்டு, தண்ணீரில் தோய்த்தெடுத்து இரண்டு கைகளினாலும் அழுத்தி தண்ணீரை வடித்து விடவும். பிறகு தயார் செய்துள்ள மசாலாவை உருண்டையாக எடுத்து பிரெட்டின் நடுவில் வைத்து, நான்கு ஓரங்களையும் எடுத்து மசாலா மறையும்படி மூடி உருட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்திருக்கும் பிரெட் உருண்டைகளைப் போட்டு, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். சூடான பிரெட் போண்டா தயார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading அனைவருக்கும் பிடித்த பிரெட் போண்டா ரெசிபி Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை