மொறு மொறுனு பிரான் பாப்ஸ் ரெசிபி..

Apr 16, 2018, 12:46 PM IST

இறால் வகை ரெசிப்பிகளில் பிரான் பாப்ஸ் என்பது புது வகை ரெசிபி. மொறு மொறுனு சுவையான பிரான் பாப்ஸ் எப்படி செய்றதுன்னு பார்ப்போம்..

தேவையானவை:

இறால் - 150 கிராம்

முட்டை - ஒன்று

துருவிய சீஸ் - 2 டீஸ்பூன்

பூண்டு - ஒரு பல்

சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்9p13.jpg

தக்காளி சாஸ் - ஒரு டீஸ்பூன்

ரெட் சில்லி சாஸ் - ஒரு டீஸ்பூன்

மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

மைதா மாவு - ஒரு கப்

வுடன் ஸ்கீவர்ஸ் (Wooden skewers) அல்லது ஐஸ்கிரீம் ஸ்டிக்ஸ் - தேவையான அளவு

பிரெட் கிரம்ப்ஸ் - ஒரு கப்

எண்ணெய் - தேவைக்கேற்ப

உப்பு - அரை டீஸ்பூன்

செய்முறை:

முட்டையை நன்றாக அடித்து வைக்கவும். மைதா மாவு மற்றும் பிரெட் கிரம்ப்ஸை தனித் தனிக் கப்களில் வைக்கவும். இறாலை நன்கு கழுவி சுத்தம் செய்து, அதனுடன் உரித்த பூண்டு, சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், தக்காளி சாஸ், உப்பு, மிளகுத்தூள், துருவிய சீஸ் (மொசரல்ல/அமுல் சீஸ்), 2 டேபிள்ஸ்பூன் அடித்த முட்டை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும் (தண்ணீர் துளியும் சேர்க்க வேண்டாம்).

கலவையை நன்றாகப் பிசைந்து மீடியம் சைஸ் உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் எடுத்து வைக்கவும். ஒரு சிறிய ஸ்கீவர் அல்லது ஐஸ்கிரீம் குச்சியை முட்டையில் தோய்த்து, இந்த உருண்டைகளை அதில் செருகவும். பிறகு, மைதா மாவில் புரட்டி, பின்னர் முட்டையில் தோய்த்து, மீண்டும் பிரெட் கிரம்ப்ஸில் புரட்டி வைக்கவும். எல்லா உருண்டைகளையும் இப்படிச் செய்துகொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடாக்கி, செய்துவைத்த பாப்ஸ்களைப் பொரித்தெடுக்கவும். இறால் சீக்கிரம் வெந்துவிடும் என்பதால் சிறிது நேரம் பொரித்தால் போதுமானது. சாஸுடன் பரிமாறவும்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading மொறு மொறுனு பிரான் பாப்ஸ் ரெசிபி.. Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை