சுகப்பிரசவத்திற்கு உதவும் குங்குமப்பூ..

குங்குமப்பூவில் பல்வேறு மருத்துவ நன்மைகள் உள்ளன. அவை குறித்து கீழே பார்ப்போம்..

குங்குமப் பூவிற்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது. குங்குமப் பூவை பாலுடன் சேர்த்து கொதிக்கவைத்து தினமும் சாப்பிட்டு வர சரும ஆரோக்கியம் மற்றும் சருமப் பொலிவு கண்டிப்பாக கிடைக்கும்.

மேலும் குங்குமப் பூ தைலம் சில சொட்டுக்கள் எடுத்துக் கொண்டு, முகத்தில் தடவி மசாஜ் செய்து அரை  மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் ரத்த ஓட்டம் அதிகரித்து முகம் பொலிவடையும்.

கருவுற்ற பெண்களுக்கு மூன்றாம் மாதத்திலிருந்து காய்ந்த குங்குமப்பூவை பாலில் கலந்து கொடுத்து வர, தாய்க்கும் சிசுவிற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாகும்.

கர்ப்பிணிப் பெண்கள் குங்குமப்பூ சாப்பிட்டு வந்தால், அவர்களது குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பது நம்பிக்கை. அதே குங்குமப்பூ  சுகப்பிரசவத்திற்கும் உதவுகிறது.

கர்ப்பம் தரித்துள்ள பெண்கள் வெற்றிலையுடன் சிறிது குங்குமப்பூவை கலந்து சாப்பிட்டு வந்தாலோ அல்லது காய்ச்சிய பாலில் அதை இட்டு அருந்தி வந்தாலோ, பிறக்கும் குழந்தையானது அழகாகவும், பிரசவ வலி இன்றியும் பிறக்கும்.

பெண்களின் மாதவிலக்கு வலியைப் போக்கும் குணமும் குங்குமப்பூவிற்கு உண்டு.மேலும், குங்குமப்பூவில் அழகின் ரகசியமும் ஒளிந்துள்ளது.

குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொண்டு அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம்.

குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும்.

இந்த கலவையை தினமும் பூசி வர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்தஇடம் தெரியாமல் ஓடிவிடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.

நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை  மீட்டுத்தரும்..

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-do-facial-at-home
பெண்களின் அழகை மேம்படுத்த சில டிப்ஸ்.. இதை செய்தால் முகம் ஜொலிக்குமாம்..!
what-are-the-secrets-of-beauty
அழகு என்றால் யாருக்கு தான் பிடிக்காது?? நீங்களே சொல்லுங்கள்
what-are-the-benefits-of-using-honey
தேனில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள் என்ன??
secret-of-kerala-girls
கேரளா பெண்களின் அழகு சீக்ரெட்.. இதை செய்தால் முகம் பளபளப்பாக இருக்குமாம்..
how-to-sleep-at-menstrual-cycle-time
எப்படி தூங்கினால் வலி இருக்காது தெரியுமா?? மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு உதவும் சில டிப்ஸ்..
how-to-cure-hair-loss
முடி உதிர்வை தடுக்க ஒரு இன்ஸ்டன்ட் டிப்ஸ்.. இப்படி செஞ்சு பாருங்க அசந்துடுவிங்க..!
how-to-loss-weight-after-delivery
பெண்கள் குழந்தை பெற்ற பிறகு குண்டாக காரணம் என்ன?? மீண்டும் பழைய நிலைக்கு மாறுவது எவ்வாறு??
how-to-choose-lipstick
லிப்ஸ்டிக்கை எப்படி தேர்வு செய்ய வேண்டும்?? வாங்க பார்க்கலாம்..
how-to-cure-wrinkles-with-orange-face-mask
முகம் 20 வயது போல மின்ன வேண்டுமா.. ஆரஞ்சு பவுடர் தான் பெஸ்ட்.. ஆண்களும் பயன்படுத்தலாம்..
how-to-escape-from-stomach-pain
பெண்கள் கார்னர்.. வயிற்று வலியில் இருந்து தப்பிக்க வேண்டுமா?? அப்போ இதை செய்யுங்கள்..
Tag Clouds