நாவூறும்..நெய்மீன் கருவாடு தொக்கு ரெசிபி..

Apr 21, 2018, 15:42 PM IST

அனைவருக்கும் பிடித்த நாவூறும் நெய்மீன் கருவாடு தொக்கு ரெசிபி எப்படி செய்றதுன்னு பாப்போம்..

சமைக்க தேவையானவை:

 நெய்மீன் கருவாடு - 2 துண்டுகள் சின்ன வெங்காயம் - 1/2 கப் பூண்டு - 1/8 கப் தக்காளி - 3 மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு சிறிய குச்சி நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன் தண்ணீர் - 3/4 கப்

உணவு செய்முறை:

முதலில் கடாயில் எண்ணெய் விட்டு வெட்டி வைத்த சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி கறிவேப்பிலை சேர்க்கவும். சூடான நீரில் கருவாட்டை எடுத்து 10 நிமிடங்கள் ஊற விடவும்.

பின் அவற்றை கடாயில் போட்டு அதனுடன் மிளகாய் தூள் சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும். அவை நன்றாக வெந்து தண்ணீர் சுருண்டு தொக்கு பதத்திற்கு வந்த பின் அடுப்பை அணைக்கவும். நெய்மீன் கருவாடு தொக்கு ரெடி!!!

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading நாவூறும்..நெய்மீன் கருவாடு தொக்கு ரெசிபி.. Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை