வாய் புண் குணமாக்கும் எளிய வழிகள்..

Apr 21, 2018, 17:08 PM IST

அடிக்கடி வாயில் புண் வந்தால் வயிற்றில் ஏதோ பிரச்னையின் அறிகுறியாக கூட இருக்கலாம். வாய் புண் வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. அவற்றை, எப்படி எளிய வழியில் குறைக்கலாம் என்று பார்ப்போம்..

தேன், சுத்தமான நெய் அல்லது கிளிசரின் (Glycerin) ஆகியவற்றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவுவது பலன் தரும்.
வாழைப்பழத்தைத் தயிருடன் கலந்து, காலை உணவாக உட்கொண்டால், வாய்ப்புண் மூலம் ஏற்படும் எரிச்சல் அன்று முழுவதும் மறையும்.
தக்காளிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி வாயில் போட்டு மென்று தின்பது வாய்ப்புண்ணை ஆற்றிவிடும்.
மிதமான சூடுள்ள நீரில் உப்பு மற்றும்எலுமிச்சை சாற்றைக் கலந்து (மவுத் வாஷ்) கொப்பளிப்பது பலன் அளிக்கும்.
மஞ்சள் தூளை நீரிட்டுக் கொதிக்க வைத்து, சிறிது ஆறிய பின் மிதமான சூட்டில் வாய்க் கொப்பளித்தால் பலன்கிடைக்கும்.
மாதுளம்பழத் தோலை நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டிய நீரைக் கொண்டு வாய்க் கொப்பளித்தால் வாய்ப்புண் எரிச்சல் மறையும்..

You'r reading வாய் புண் குணமாக்கும் எளிய வழிகள்.. Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை