மொறு மொறு மட்டன் பக்கோடா ரெசிபி..

Apr 23, 2018, 14:00 PM IST

அசைவப்பிரியர்களுக்கு பிடித்த அசைவ வகைகளில் மட்டன் ரெசிபியும் ஒன்று. அந்த வகையில், மொறு மொறுனு மட்டன் பக்கோடா ரெசிபி குறித்து இங்கு பார்ப்போம்..

தேவையான பொருட்கள்:

மட்டன் - 7 (அ) 8 சின்ன துண்டுகள்
வெங்காயம் - 1/2
இஞ்சி, பூண்டு - 1/2 டீ ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
ரெடிமேட் பஜ்ஜி போண்டா மிக்ஸ் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை:

குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு தாளிக்கவும்.

பிறகு இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி மட்டன், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து 5 விசில் வரை வேக விடவும்.

கறி வெந்தவுடன் தண்ணீரை வடிகட்டி தனியே வைத்துக்கொள்ளவும்.

பிறகு மட்டன் கலவையில் பஜ்ஜி போண்டா மிக்ஸ் கொஞ்சம் சேர்த்து பிசறிக்கொள்ளவும். தேவையென்றால் மட்டன் வேகவைத்த தண்ணீரை சேர்த்துக்கொள்ளலாம்.

மட்டன் கலவை நன்கு கறியுடன் சேர்ந்து இருக்கவேண்டும்.
பொரிப்பதற்கு எண்ணெயை காயவைத்து பொரித்து எடுக்கவும்.
சுவையான மட்டன் பக்கோடா ரெடி.

இதே மாதிரி சிக்கன் பக்கோடாவும் செய்யலாம். எலும்புடன் அல்லது எலும்பில்லாமல், சிறு சிறு துண்டுகளாக வேக வைத்துக்கொள்ளவும்..

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading மொறு மொறு மட்டன் பக்கோடா ரெசிபி.. Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை