உடலுக்கு சத்து தரும் தர்பூசணி அடை..

Aug 28, 2018, 15:48 PM IST

அடை வகையில் பல அடைகள் உள்ளது. ராகி அடை, கோதுமை அடை, பருப்பு அடை என பல வகைகள் உண்டு. இன்று நாம் பார்க்க இருப்பது தர்பூசணி அடை. சரி, தர்பூசணி அடை எப்படி செய்றதுன்னு பார்ப்போமா..

தேவையான பொருட்கள்:

தர்பூசணியின் வெள்ளை நிற தோல் பகுதி (சிவப்பு பகுதியை எடுத்துவிட்டு, பச்சைத் தோலை லேசாக சீவினால் கிடைப்பது) - ஒரு கப்

புழுங்கல் அரிசி - 2 கப்

துவரம்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன்

தேங்காய்த் துருவல் - கால் கப்

காய்ந்த மிளகாய் அல்லது பச்சை மிளகாய் - 2

நறுக்கிய கறிவேப்பிலை

கொத்தமல்லித்தழை - தலா ஒரு டேபிள்ஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புழுங்கல் அரிசி, துவரம்பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

பிறகு, உப்பு, காய்ந்த மிளகாய் (அ) பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

தர்பூசணியின் வெள்ளை நிற தோல் பகுதியை துருவி, அரைத்த மாவுடன் சேர்த்து, தேங்காய்த் துருவலையும் சேர்க்கவும்.

இதனுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

தோசைக்கல்லை சூடாக்கி, மாவை அடைகளாக ஊற்றி, ஓரங்களில் எண்ணெய் விட்டு, ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு, வேகவிட்டு எடுக்கவும்.

You'r reading உடலுக்கு சத்து தரும் தர்பூசணி அடை.. Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை