குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சோளா பூரி ரெசிபி எளிமையாகவும், சுவையாகவும் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையானப் பொருட்கள்:
மைதா மாவு - ஒரு கப்
கோதுமை மாவு - ஒரு கப்
ரவை - அரை கப்
தயிர் - கால் கப்
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மைதா மாவு, ரவை, சோடா உப்பு, தயிர், தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து மிருதுவாகும் வரை நன்றாக பிசையவும். பிசைந்த மாவை அரை மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.
மாவு நன்கு ஊறியதும் ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திக் கட்டையில் வைத்து சற்று பெரியதாக தேய்த்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, எண்ணெய் நன்றாக சூடானதும் தேய்த்து வைத்துள்ள பூரியை போட்டு லேசாக கரண்டியால் பூரி ஓரங்களில் அழுத்தவும்.
பின்பு ஒரு பக்கம் சிவந்ததும், மறுபக்கம் திருப்பி போட்டு வேகவைத்து எடுத்தால் ருசியான சோளா பூரி தயார். இதற்கு சென்னா மசாலாவை தொட்டுக்கொள்ளலாம்.