முருங்கையை எவ்ளோ விதமா சமைச்சு சாப்பிட்டுருப்போம். ஆனால் முருங்கை மசாலாப்பொரியல் சாப்பிட்டு இருக்கமாட்டோம். அதனால நாளை ஞாயிற்றுக்கிழமை செஞ்சு பாத்துட்டு சொல்லுங்க.
தேவையானவை: முருங்கைக்காய் 3, பெரிய வெங்காயம் 2, தக்காளி 4, உப்பு தேவைக்கு, எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு.
அரைக்க: தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், மல்லித் தூள் 1 டீஸ்பூன், இஞ்சி 1 துண்டு, பூண்டு 5 பல், சோம்பு 1 டீஸ்பூன்.
செய்முறை: முருங்கைக்காயை விரல் நீளத் துண்டுகளாக நறுக்குங்கள்.வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள்.
அரைக்கக் கூறியுள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நைஸாக அரைத்தெடுங்கள்.
எண்ணெயைச் சூடாக்கி வெங்காயத்தை வதக்குங்கள். பிறகு தக்காளி, அரைத்த விழுது, உப்பு சேர்த்து பச்சை வாடை போக வதக்குங்கள்.
பின்னர் முருங்கைக்காய், அரை கப் தண்ணீர் சேர்த்துக் கிளறி, மூடி வையுங்கள். தீ மிதமாக எரிய வேண்டும். முருங்கைக்காய் வெந்ததும், தீயை அதிகப்படுத்தி, கறிவேப்பிலை தூவி, சுருளக் கிளறி இறக்குங்கள்.