மழைக்காலம் ஆரம்பிச்சாசு நாக்கு சூடான காரமான உணவுகளையே நாடும். இந்நிலையில் வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய கோழி வறுவல் தான் இது. சரி எப்படி செய்வதென்று பார்ப்போம். அதோடு உங்க வீட்டில் இருப்பவர்களையும் கோழிவறுவல் செஞ்சி அசத்துவோம்.
தேவையானப் பொருட்கள்:
சிக்கன் - 1 கிலோ
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
நெய் - 1 ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1அரை டீஸ்பூன்
பூண்டு - 6 பல்
உப்பு, கறிவேப்பிலை - தேவையானது.
செய்முறை:
எலும்பு நீக்கப்பட்ட சிக்கனைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கழுவிச் சுத்தம் செய்து கொள்ளவும். வாணலியில் எண்ணெயையும், நெய்யையும் கலந்து ஊற்றிச் சூடானதும் கடுகு, உளுந்து, சீரகம், சோம்பு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், பூண்டு இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு பொரிக்கவும்.
பிறகு சுத்தம் செய்த சிக்கனில் மஞ்சள் தூளைத் தூவி, ஐந்து நிமிடம் நன்றாகக் கிளற வேன்ண்டும். பிறகு 1 கப் தண்ணீர் ஊற்றி, அடிக்கடி கிளறிவிட்டு தண்ணீர் வற்றும் வரை வேகவைக்கவும். தண்ணீர் முழுவதுமாகச் சுண்டியதும் மிளகுத்தூளைத் தூவி, சுருளக் கிளறி, எண்ணெய் மேலாக மினுமினுக்கும் போது இறக்கவும். சுவையான “காரைக்குடி கோழி வறுவல்” தயார்.