கடலை மாவு தேங்காய் பர்பி இது மிகவும் எளிதில் செய்யக்கூடிய ஒரு இனிப்பு பலகாரம். வெறும் 4 பொருட்களை கொண்டு ½ மணி நேரத்திற்குள் செய்து முடித்து விடலாம் இதை தீபாவளிக்கு செய்து அசத்துங்கள்.
தேவையானவை:
- கடலை மாவு - ½ கப்
- துருவிய தேங்காய் - ½ கப்
- சக்கரை - 1 கப்
- நெய் - ½ கப்
செய்முறை:
- ஒரு ட்ரேயில் நெய் தடவி தயாராக வைக்கவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில், ½ கப் தண்ணீர் சேர்த்து, சக்கரையுடன் மிதமான தீயில் கொதிக்க விடவும். ஒரு கம்பி பதம் வரும் வரை கொதிக்கவேண்டும்.
- இந்த நிலையில் தேங்காய் சேர்த்து கலந்துவிட்டு, சலித்த கடலை மாவை தூவினாற்போல சேர்க்கவும். நன்கு வேகமாக கட்டி தட்டாமல் கலக்கவும்.
- நன்கு கலந்தவுடன், ½ கப் நெய்யை, ஒரு சமயத்தில் 2 ஸ்பூன் விகிதம் ஊற்றி கலக்கவும். நெய் உள்ள வாங்கியபின் அதே போல் மேலும் இரண்டு ஸ்பூன் சேர்த்து கிளறவும். இதே போல ½ கப் நெய்யும் ஊற்றி கிளறிய பின், ஓரங்களில் ஒட்டாமல் வரும்.
- முதலில் ஓரங்களில் நுரைத்தார் போலவும், பிறகு அடியில் நுரைத்தாற்போலவும் இருக்கும். பிறகு புராக் கலவையும் வெளிர் நிறமாக, நுரைத்து காணப்படும் பொழுது நெய் தடவிய தட்டில் கொட்டவும்.
- கை பொரும் சூட்டிற்கு வரும் வரை ஆரியபின் தட்டை தலை கீழாக தட்டவும். பட்டர் பேப்பரை எடுத்துவிட்டு துண்டுகளாக வெட்டவும்.