காலை உணவுக்கு ஏற்ற, உடலுக்கு சத்து தரும் சிகப்பு அவல் புட்டு ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்ப்போம்..
தேவையான பொருட்கள்:
சிகப்பு அவல் -1கப்
சர்க்கரை -1/2 கப்
தேங்காய் துருவல் -1/4 கப்
ஏலக்காய் பொடி -1/4 டீஸ்பூன்
முந்திரி பருப்பு - 4
நெய் - 1 டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
முதலில் அவலை வெறும் வாணலியில் போட்டு சிறிது சூடு படுத்தி ஆறியதும் மிக்ஸியில் போட்டு ரவையாக பொடித்து வைத்துக்கொள்ளவும்.
முந்திரி பருப்பை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும் . மீண்டும் அடுப்பில் வாணலியை வைத்து அதில் சிறிது நெய் விட்டு முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுத்தெடுத்துக்கொள்ளவும்.
அதே வாணலியில் 11/4 கப் நீர் விட்டு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு ரவையாக பொடித்த அவலை சேர்த்து கலந்து அடுப்பை குறைந்த தீயில் வைத்து மூடி போட்டு 5 நிமிடம் வேகவிடவும்.
அவல் நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்து அதில் ஏலக்காய் பொடி, தேங்காய் துருவல், வறுத்த முந்திரி பருப்பு ,நெய் சேர்த்து கலந்து நன்றாக ஆறவிடவும்.
நன்றாக ஆறியதும் அவரவர் ருசிக்கேற்ப சர்க்கரையை சேர்த்து கலந்து பரிமாறவும்.
செய்வதற்கு சுலபமான அதிக சத்துக்கள் நிறைந்த இந்த அவல் புட்டு காலை அல்லது மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.