5000 எம்.ஏ.எச் பேட்டரி கொண்ட புதிய ஸ்மார்ட் போனை அசுஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
ஸ்மார்ட் போன் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று விற்பனை ஆகிக் கொண்டிருக்கும் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட் போனின் அப்டேட் வெர்ஷனான மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட் போனை இந்தியாவில் அசுஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
3 ஜிபி ரேம் கொண்ட மேக்ஸ் ப்ரோ எம்2வின் விலை ரூ.12,999 ஆகவும், 4 ஜிபி ரேம் வேரியன்ட் ஸ்மார்ட் போன் ரூ.14,999க்கும் 6 ஜிபி வேரியன்ட் ஸ்மார்ட் போன் ரூ. 16,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஃபிளிப்கார்ட் தளத்தில் வரும் டிசம்பர் 18 முதல் இந்த மேக்ஸ் ப்ரோ எம்2 மொபைல்கள் விற்பனைக்கு வரவுள்ளன.
இதில், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்குகிறது. 12 எம்.பி பிரைமரி கேமரா மற்றும் 5 எம்.பி கொண்ட சப்போர்ட் பிரைமரி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
செல்ஃபி பிரியர்களுக்காக 13 எம்.பி. கொண்ட செல்ஃபி கேமராவும், இரவிலும் செஃல்பி எடுக்கும் வகையில் எல்.இ.டி பிளாஷும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் போனின் முக்கிய அம்சமாக 5000 எம்.ஏ.எச் கொண்ட பேட்டரி உள்ளது. இதனால், 2 நாட்களுக்கு எப்படி பயன்படுத்தினாலும், பேட்டரி நீடிக்கும் என்பதால், இந்த மொபைலை வாங்க பலரும் ஆர்வத்துடன் காத்துக் கிடக்கின்றனர்.