சுவையான ஆட்டு ஈரல் கிரேவி ரெசிபி

Tasty Mutton Liver Gravy Recipe

by Isaivaani, Jun 21, 2019, 14:03 PM IST

அசைவப் பிரியர்களுக்கு பிடித்த ஆட்டு ஈரல் கிரேவி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 2

தக்காளி - 1

இஞ்சி பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 1

ஈரல் - 300 கிராம்

மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்

கரம் மசாலா - அரை டீஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

தனியா - 1 டேபிள் ஸ்பூன்

மிளகு - 1 டீஸ்பூன்

சோம்பு - 1 டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை

எண்ணெய்

உப்பு

செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து தனியா, மிளகு, சோம்பு, சீரகம் சேர்த்து மிதமான சூட்டில் வறுத்து ஆரவைத்து பொடி செய்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பிறகு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவுமு.
தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

தக்காளி வதங்கியதும், ஈரல் துண்டுகளை சேர்த்து கிளறவும். ஈரல் ஓரளவுக்கு வதங்கியதும், மிளகாய்த்தூள், கரம் மசாலா, அரைத்து வைத்த மசாலா, உப்பு சேர்த்து கிளறி வதக்கவும்.

பிறகு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிளறி வேகவிடவும்.

ஈரல் நன்றாக வெந்து கிரேவி பதத்திற்கு வந்துவிடும். இப்போது, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

சுவையான ஆட்டு ஈரல் கிரேவி ரெடி..!

You'r reading சுவையான ஆட்டு ஈரல் கிரேவி ரெசிபி Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை