சத்து நிறைந்த பூசணிக்காய் சூப் ரெசிபி

Healthy Pumpkin soup Recipe

by Isaivaani, Jun 28, 2019, 18:32 PM IST

வீட்டிலேயே சுவையான மற்றும் சத்து நிறைந்த பூசிணக்காய் சூப் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

பூசணிக்காய் - கால் கிலோ

வெங்காயம் - 4

பீன்ஸ் - 3

முட்டை கோஸ் - 1 துண்டு

கேரட் - 5

உருளைக்கிழங்கு - 1

செலரி தண்டு - 2

பூண்டு - 5

வெண்ணெய்

மிளகு

உப்பு

செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.

தண்ணீர் சூடானதும் கேரட், பீன்ஸ், கோஸ், வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு, செலரி தண்டு (அனைத்தும் நறுக்கியது) சேர்க்கவும்.

அதனுடன், மிளகுத்தூள், உப்பு சேர்த்து கிளறி சுமார் 30 நிவீடங்களுக்கு வேகவிடவும்.
பின்னர், இதனை வடிகட்டி வைக்கவும்.

வாணலியில் வெண்ணெய்விட்டு உருக்கவும். அதனுடன், நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.

கூடவே, செலரி தண்டு, கேரட், பூசணிக்காய் சேர்த்து கிளறவும்.
பிறகு, வடிகட்டிய தண்ணீரை காயுடன் சேர்த்து சுமார் அரை மணி நேரம் வேகவிடவும்.
காய் நன்றாக வெந்ததும் நன்றாக மசித்துவிடவும்.

இறுதியாக, வெண்ணெய் சேர்த்து சுடச்சுட பரிமாறவும்.

சுவையான பூசணிக்காய் சூப் ரெடி..!

You'r reading சத்து நிறைந்த பூசணிக்காய் சூப் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை