சுவையான மற்றும் ஆரோக்கியமான கோதுமை ரவை பாயாசம் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
கோதுமை ரவை - 50 கிராம்
தேங்காய் துருவல் - அரை கப்
வெல்லம் - ஒன்றரை கப்
முந்திரி - 10
உலர்ந்த திராட்சை - 8
சுக்கு பொடி - ஒரு சிட்டிகை
ஏலக்காய் பொடி - ஒரு சிட்டிகை
காய்ச்சிய பால் - ஒரு தம்ளர்
நெய்
செய்முறை:
வாணலியில் நெய்விட்டு உருகியதும், முந்திரி, உலர்ந்த திராட்சை, தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
அதே வாணலியில், கோதுமை ரவை சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும். ரவை வறுப்பட்டதும் 4 கப் வெந்நீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்துடன், தண்ணீர் சேர்த்து நன்றாக கரைக்கவும்.
கோதுமை ரவை நன்றாக வெந்ததும், வெல்லம் ஜீரா சேரத்து கிளறிவிடவும்.
கோதுமை ரவையுடன், வெல்லம் சேர்ந்து வெந்ததும் சுக்குப் பொடி, ஏலக்காய்ப் பொடி, வறுத்து வைத்த முந்திரி கலவையை சேர்க்கவும்.
இறுதியாக, பால் சேர்த்து கொதி வந்ததும் இறக்கவும்.
சுவையான கோதுமை ரவை பாயாசம் ரெடி..!