சட்டென செய்யலாம் ரவா ஸ்வீட் ரெசிபி

Delicious Rava Sweet Recipe

by Isaivaani, Jul 9, 2019, 18:57 PM IST

வீட்டில் திடீரென விருந்தாளி வந்துட்டாங்களா.. அப்போ இந்த ஸ்வீட்டை செய்து அசத்துங்க..

தேவையான பொருட்கள்:

ரவை - 2 கப்

சர்க்கரை - ஒன்றரை கப்

பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்

காய்ச்சிய பால் - ஒரு கப்

பாதாம் - 10

வெண்ணெய்

எலுமிச்சை சாறு - சில துளிகள்

செய்முறை:

முதலில் ரவையை மிக்ஸியில் போட்டு பொடியாக்கிக் கொள்ளவும்.

இதனை ஒரு கிண்ணத்தில்போட்டு அத்துடன், சர்க்கரை, பேக்கிங் பவுடர், பால் சேர்த்து நன்றாக கலக்கவும்.

ஒரு கேக் பேனில் வெண்ணெய் தடவி, பின்னர் இந்த கலவையை ஊற்றி சுமார் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

இதற்கிடையே, ஒரு கிண்ணத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும், அரை கப் சர்க்கரை சேர்த்து பாகு தயாரிக்கவும்.

ரவை பாலுடன் நன்றாக ஊறியதும், கத்தியால் பிடித்த வடிவில் வெட்டி, அதன் மீது ஒவ்வொரு பாதாமை வைத்து ஓவனில் வைத்து வேகவிடவும்.

கலவை வெந்ததும், அதன் மீது சர்க்கரை பாகு ஊற்றி ஊறவிட்டு ஸ்லைஸ் போட்டு எடுக்கவும்.

சுவையான ரவா ஸ்வீட் ரெடி..!

You'r reading சட்டென செய்யலாம் ரவா ஸ்வீட் ரெசிபி Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை