உலக கோப்பை... இந்தியா VS நியூசி. போட்டி மழையால் பாதிப்பு.! ரத்தானால் யாருக்கு சாதகம்

CWC, rain stops India vs New Zealand semifinal match, what will happens next if play cancel

by Nagaraj, Jul 9, 2019, 21:37 PM IST

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான போட்டி, மழையால் பாதியில் தடைபட்டுள்ளது. இதனால் போட்டியில் ஓவர்கள் குறைக்கப்பட்டாலோ, அல்லது ஆட்டமே ரத்து செய்யப்பட்டாலோ, முடிவுகள் யாருக்கு சாதகமாகும் என்ற கணக்குப் போட ஆரம்பித்துள்ளனர்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டம் மான்செஸ்டரில் இன்று இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையே நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசி.அணி கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர் மற்றும் பும்ரா ஆகியோரின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் திணறினர்.ஒரு ரன் எடுத்த நிலையில் பும் ராவின் வேகத்தில் குப்டில் வீழ்ந்தார். ஹென்றி நிக்கோலஸ் (28), நீஸம் (12), கிராண்ட் ஹோம் ஆகியோரும் அடுத்தடுத்து வீழ்ந்தனர்.

நியூசிலாந்து கேப்டன் (67) ஓரளவுக்கு தாக்குப் பிடித்து அணியின் சரிவை மீட்டார். அடுத்து ராஸ் டெய்லரும் (67) நிலைத்து நின்று ஆடினார். நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டுள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்றைய ஆட்டம் தொடருமா? அல்லது ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடைபெறுமா? அல்லது ரிசர்வ் நாளான நாளை போட்டி எவ்வாறு நடத்தப்படும் என்பது குறித்து கீழ்க்கண்ட விதிகள் பின்பற்றப்படும் என்று தெரிகிறது.

இன்று போட்டி முடியும் நேரத்துக்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பு மழை நின்று போட்டி மீண்டும் தொடங்கினால், இந்திய அணி 20 ஓவரில்148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்படும். அப்படி 20 ஓவர் முடிவதற்குள் மீண்டும் மழை குறுக்கிட்டு போட்டி தடைபட்டால் ரிசர்வ் நாளான போட்டி அப்படியே தொடரும்.

இன்று இனி போட்டி நடைபெற வாய்ப்பு இல்லை என்று ரத்தாகும் பட்சத்தில் நாளை புதிதாக போட்டி தொடங்கும். அப்படி நாளையும் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால், புள்ளிப் பட்டியலில் பெற்ற இடத்தின் அடிப்படையில் பைனலுக்கு செல்லும் அணி முடிவு செய்யப்படும். அப்படிப் பார்த்தால் முடிவு இந்திய அணிக்கு சாதகமாகவே அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading உலக கோப்பை... இந்தியா VS நியூசி. போட்டி மழையால் பாதிப்பு.! ரத்தானால் யாருக்கு சாதகம் Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை