உலக கோப்பை அரையிறுதி; மழையால் தடைபட்ட இந்தியா Vs நியூசி., போட்டி..! இன்று தொடர்கிறது

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான முதலாவது அரையிறுதிப் போட்டி, நேற்று மழையால் தடைபட்டது. விதிகளின்படி இன்று போட்டி விடுபட்ட இடத்திலிருந்து அப்படியே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டம் மான்செஸ்டரில் இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையே நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசி.அணி கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர் மற்றும் பும்ரா ஆகியோரின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் திணறினர்.ஒரு ரன் எடுத்த நிலையில் பும் ராவின் வேகத்தில் குப்டில் வீழ்ந்தார். ஹென்றி நிக்கோலஸ் (28), நீஸம் (12), கிராண்ட் ஹோம் ஆகியோரும் அடுத்தடுத்து வீழ்ந்தனர்.
நியூசிலாந்து கேப்டன் (67) ஓரளவுக்கு தாக்குப் பிடித்து அணியின் சரிவை மீட்டார். அடுத்து ராஸ் டெய்லரும் (67) ஓரளவுக்கு நிலைத்து நின்று ஆடினார். நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது.

நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மழை சற்று ஓய்ந்தது. இதனால் நேற்றிரவு 11.05 மணிக்கு மீண்டும் போட்டி தொடங்கும் என்றும், டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 20 ஓவர்களில் இந்தியா 148 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ஆட்டம் தொடங்கும் முன் மீண்டும் மழை குறுக்கிட்டதால் போட்டி நடைபெறவில்லை. இதனால் ரிசர்வ் நாளான இன்று போட்டி விடுபட்ட இடத்திலிருந்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்டு, டிஎல்எஸ் விதிப்படி இந்தியாவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு போட்டி தொடர்ந்திருந்தால், இந்தியாவுக்கு சிக்கலாகியிருக்கும். ஆனால் கடைசி வரை மழை பெய்ததால் இந்தியாவுக்கு சற்று நிம்மதி கிடைத்தது எனலாம். இன்று 50 ஓவர்களும் ஆடவுள்ளதால் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது.

மேலும் மான்செஸ்டரில் இன்று மழைக்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளதாக வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மழைக்கு 16% வாய்ப்பு மட்டுமே உள்ளதால் இன்று போட்டி முழுமையாக நடைபெறுவது உறுதி என்றும் கூறப்பட்டுள்ளது. ஒரு வேளை இன்றும் மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டால், புள்ளிப் பட்டியலில் பெற்ற இடத்தின் அடிப்படையில் பைனலுக்கு செல்லும் அணி முடிவு செய்யப்படும். அப்படிப் பார்த்தாலும் முடிவு இந்திய அணிக்கு சாதகமாகவே அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாதனை மேல் சாதனை"..! உலக கோப்பையில் நாயகனாக 'ஜொலிக்கும்' ரோகித்

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்

CWC-England-won-the-world-cup-in-thrilling-match-against-New-Zealand
என்னா 'த்ரில்'... முதல்ல 'டை'... சூப்பர் ஓவரும் 'டை'...! இங்கிலாந்து
CWC-final-England-242-runs-New-Zealand-match-capture-Cup-first-time-history
உலக கோப்பையை கைப்பற்றுமா இங்கிலாந்து...? 242 ரன்கள் எடுத்தால் சாத்தியம்
England-vs-New-Zealand-CWC-final
உலக கோப்பை பைனல்; நியூசிலாந்து பேட்டிங் - வெல்லப் போவது யாரு?
CWC--what-prize-amount-each-team
உலக கோப்பை 'திருவிழா' இன்றுடன் நிறைவு..! யாருக்கு எவ்வளவு பரிசு தெரியுமா?
CWC--what-is-the-prize-amount-for-each-team
உலககோப்பை பைனல் : இங்கி.,VS நியூசி., மல்லுக்கட்டு; முதல் முறை கோப்பை யாருக்கு ..?
20-year-old-Rashid-Khan-appointed-as-Afghanistan-captain-of-all-forms-of-cricket
20 வயதான ரஷீத்கான்.. ஆப்கன் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன்
CWC-No-flight-tickets-to-return-home-team-India-stranded-in-England-till-Sunday
'நாடு திரும்ப டிக்கெட் கிடைக்கல..' எதிர்பாராத தோல்வியால் இந்திய அணிக்கு இப்படியும் ஒரு சோதனை
CWC-semifinal-England-beat-Australia-by-8-wickets-and-enters-to-final
ஜேசன் ராய் அதிரடியால் ஆஸி. பரிதாபம்; உலக கோப்பை பைனலுக்கு இங்கிலாந்து தகுதி
CWC-semifinal-Australia-all-out-for-223-runs-inthe-match-against-England
உலக கோப்பை அரையிறுதி; ஆஸி. 223 ரன்னுக்கு ஆல்அவுட்..! இங்கிலாந்து அபாரம்
CWC-India-Vs-New-Zealand-semifinal-match
உலக கோப்பை கிரிக்கெட் ; திக்.. திக்... போட்டி...! இந்தியாவின் கதையை முடித்தது நியூசிலாந்து

Tag Clouds