நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு குழந்தைகள் விரும்பி சாப்பிடும் குர்குரே வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - அரை கப்
கடலை பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - அரை கப்
மைதா மாவு - கால் கப்
காஷ்மீரி மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
தக்காளி பவுடர் - அரை டீஸ்பூன்
சாட் மசாலா - அரை டீஸ்பூன்
ஆம்சூர் பவுடர் - அரை டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு
செய்முறை:
முதலில், அரிசி, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றை தனித்தனியாக தண்ணீரில் சுமார் 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர், இந்த கலவையுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
இதனை ஒரு கிண்ணத்தில் ஊற்றி அத்துடன் சோள மாவு, மைதா மாவு, காஷ்மீரி மிளகாய்த்தூள், மல்லித்தூள், சாட் மசாலா, ஆம்சூர் பவுடர், உப்பு சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாக கலந்துக் கொள்ளவும்.
இந்த கலவையை ஒரு சிறிய பையில் போட்டு அதன் முனையை வெட்டி சூடான எண்ணெய்யில் முறுக்கு பிழிவதுப் போல் பிழிந்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
இவற்றின் மீது சாட் மசாலா, ஆம்சூர் பவுடர், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலந்து தூவிவிட்டு பரிமாறவும்.
கிறிஸ்பியான குர்குரே ரெடி..!