அசத்தலான சுவையில் ஸ்வீட் கார்ன் குடைமிளகாய் மசாலா ரெசிபி
வீட்டிலேயே ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் கார்ன் குடைமிளகாய் மசாலா எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
பெரிய வெங்காயம் - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
தக்காளி - 3
குடைமிளகாய் (பச்சை, மஞ்சள், சிவப்பு) - அரை கப்
முந்திரி பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
ஸ்வீட் கார்ன் - அரை கப்
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை
உப்பு
செய்முறை:
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய்விட்டு உருகியதும் சீரகம், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
பிறகு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனைபோகும் வரை வதக்கவும்.
அத்துடன், மிளகாய்த்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
பின்னர், தக்காளி விழுது சேர்த்து வேகவிட்டு, குடைமிளகாயை சேர்த்து கிளறவும்.
வெந்ததும், முந்திரி பேஸ்ட், வேக வைத்து ஸ்வீட் கார்ன், தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறி சுமார் 5 நிமிடங்களுக்கு வேகவிடவும்.
இறுதியாக, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
சுவையான ஸ்வீட் கார்ன் குடைமிளகாய் மசாலா ரெடி..!