மாலையில் சுறு சுறுப்பாக இருக்க இதை குடியுங்கள்.. சிம்பிளான செய்முறையில் தக்காளி சூப் செய்து மகிழுங்கள்..

how to make tomato soup in tamil

by Logeswari, Oct 14, 2020, 17:38 PM IST

வருகின்ற மழை காலத்தில் ஏதாவது சூடாக குடித்தால் நல்லா இருக்குமே என்றும் நினைப்பவர்களுக்கு அசத்தலான டிஷ் காத்து கொண்டிருக்கிறது. சுவை, ஆரோக்கியம் என ஒன்று சேர்ந்து சூப்பில் நமக்கு கிடைக்கின்றது. சூப்பில் நிறைய வகைகள் உள்ளது. இது மாலை ஸ்னாக்ஸ்கு அசத்தலாக இருக்கும். அதில் நாம் சுவையான தக்காளி சூப்பை எப்படி செய்வது என்று பார்ப்போம்..

தேவையான பொருள்கள்:-
தக்காளி – 5
வெங்காயம் – 1
பூண்டு – 6 பல்
சோள மாவு – 1 ஸ்பூன்
வெண்ணெய் – 2 ஸ்பூன்
தக்காளி சாஸ் – 2 ஸ்பூன்
மிளகுத்தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை :-
முதலில் வெங்காயம்,தக்காளி மற்றும் பூண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பிறகு அடுப்பில் வாணலியை வைத்து அதில் வெண்ணெய் ஊற்றவும். வெண்ணெய் காய்ந்த பிறகு பூண்டு சேர்த்து வதக்கி கொள்ளவும்.

அடுத்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும். வெங்காயம் சிறிது பொன்னிறமாக மாறியவுடன் அதில் தக்காளியை சேர்த்து கொள்ளவும். பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ளவும். பின்னர் தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

சூப்பில் உள்ள தக்காளியை நன்கு மசித்து கொண்டு வடிக்கட்டி கொள்ள வேண்டும். பிறகு சிறிதளவு தக்காளி சாஸ் விட்டு கொள்ளுங்கள். ஒரு பௌலில் சிறிதளவு சோலா மாவை எடுத்து தண்ணீரில் கலந்து கொண்டு சூப்பில் ஊற்றி விடுங்கள். மீண்டும் ஒரு 10 நிமிடம் கொதிக்க விடுங்கள்.

கடைசியில் மிளகு தூள்.கொத்தமல்லி தழை ஆகியவை சேர்த்து இறக்கி விடுங்கள். சுவையான.. சூடான தக்காளி சூப்பை குடித்து மகிழுங்கள்.

You'r reading மாலையில் சுறு சுறுப்பாக இருக்க இதை குடியுங்கள்.. சிம்பிளான செய்முறையில் தக்காளி சூப் செய்து மகிழுங்கள்.. Originally posted on The Subeditor Tamil

More Samayal recipes News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை