வாய்க்கு ருசியாக காரப்பூந்தி தயிர் பச்சடி ரெசிபி ..!மறக்காம ட்ரை பண்ணுங்க..

Advertisement

தினமும் சாம்பார், காரக்குழம்பு இதே சாப்பிட்டால் மிகவும் வெறுப்பாக இருக்கும். ஒரு நாள் மாறுதலுக்காக வேற ஏதாவது டிஷ் ட்ரை பண்ணலாமே! அப்போ கண்டிப்பா காரப்பூந்தி தயிர் பச்சடி ரெசிபியை ட்ரை பண்ணுங்க. இதில் இருக்கும் புளிப்பு மற்றும் காரத்தின் சுவை நம் நாக்கை சுவையில் கட்டிப்போட்டு விடும். நாம் உழைப்பதே வாய்க்கு ருசியா சாப்பிடத்தானே... சரி வாங்க இந்த ரெசிபி எப்படி செய்வது குறித்து பார்ப்போம்.

தேவையான பொருள்கள்:-
காரப்பூந்தி - 100 கிராம்
தயிர் - 1 கப்
பச்சை மிளகாய் - 2
சாம்பார் வெங்காயம் - 10
எண்ணெய் -தேவையான அளவு
கடுகு -தேவையான அளவு
உப்பு -தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
சாம்பார் பொடி - 1 ஸ்பூன்.

செய்முறை:-
அடுப்பை பத்தவைத்த பிறகு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடான பிறகு அதில் கடுகு. பச்சை மிளகாய், வெங்காயம், தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பச்சை வாசனை நீங்கியதும் அதில் ஒரு ஸ்பூன் சாம்பார் பொடி சேர்த்து 3 நிமிடம் கிளறவும். ஒரு பக்கம் பாத்திரத்தில் தயிர் எடுத்து கொள்ளவும்.தயிரில் வதக்கிய கலவையை சேர்த்து கொண்டு தயிரோடு கிளறவும்.

இந்த உணவை பரிமாறும் பொது காரப்பூந்தியை சேர்த்து கொண்டால் காரப்பூந்தி தயிர் பச்சடி ரெடி.. இதனை சைட் டிஷ் ஆக ஒரு தட்டில் வைத்து கூட சாப்பிடலாம்.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-cook-andra-pepper-chicken
காரசாரமான சுவையான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் ரெசிபி..! சூப்பர் டேஸ்ட்.. மிஸ் பண்ணிடாதீங்க
how-to-make-kovaikkai-masalapath-recipe
சுவையான கோவைக்காய் மசாலாபாத் செய்வது எப்படி?? வாங்க பார்க்கலாம்..
how-to-cook-cauliflower-soup
அருமையான வெயிட் லாஸ் ட்ரிங்க்! காலிஃபிளவர் சூப் செய்வது எப்படி? வாங்க சமைக்கலாம்..
how-to-make-saththu-mavu
இனி வீட்டிலே சத்துமாவு தயாரிக்கலாம்! கெமிக்கல் கலந்த மாவுக்கு குட்பை சொல்லுங்கள்..
how-to-make-pepper-chicken
காரசாரமான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் செய்வது எப்படி??
how-to-make-ragi-samiya-cutlet
சுவையான ராகி சேமியா கட்லெட் செய்வது எப்படி??
how-to-make-rava-potato-finger-fry
சுவையான.. கிரிஸ்பியான.. ரவா உருளைக்கிழங்கு ஃபிங்கர் ஃபிரை செய்வது எப்படி?
how-to-make-cucumber-pachadi
உடல் எப்பொழுதும் குளு குளுன்னு இருக்க இதை சாப்பிடுங்க..!
how-to-make-neem-tea
சர்க்கரை நோய் முழுவதும் குணமாக வேப்பம் டீ குடியுங்க..
how-to-make-capsicum
சப்பாத்திக்கு ஏற்ற குடைமிளகாய் தொக்கு செய்வது எப்படி??

READ MORE ABOUT :

/body>