வயிற்று பூச்சியை அழிக்கும் வேப்பம்பூ ரசம் செய்வது எப்படி??

Nov 5, 2020, 21:20 PM IST

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்று பூச்சால் அவதிப்படுகிறார்கள். இதனால் சரியாக சாப்பிட முடியாமல் தவிக்கின்றனர். பூச்சியை அழிக்க இயற்கை மருத்துவம் தான் சரியான வழி. வேப்பம்பூவை சாப்பிடும் பொழுது அதனின் கசப்பு தன்மை பூச்சிகளை ஒழிக்க உதவுகிறது.ஆதலால் வேப்பம்பூ உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.வேப்பம்பூவில் எப்படி ரசம் வைப்பது குறித்து பார்க்கலாம்..

தேவையான பொருள்கள்:-
வேப்பம்பூ – தேவையான அளவு
புளி – சிறிதளவு
கடுகு – 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
பெருங்காயத்தூள் – சிறிதளவு
எண்ணெய் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:-
முதலில் வாணலியில் எண்ணெய் விட்டு வேப்பம்பூவை வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும். பின்னர் அதே வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வறுத்து கொள்ளவும்.

சிறிது நேரம் கழித்து கரைத்து வாய்த்த புளி கரைசல் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொத்தி வந்தவுடன் அதில் வறுத்த வேப்பம்பூ, செரிமானத்திற்கு பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

கடைசியில் சிறிதளவு கொத்தமல்லி தழையை சேர்த்து இறக்கினால் வேப்பம்பூ ரசம் தயார்..

You'r reading வயிற்று பூச்சியை அழிக்கும் வேப்பம்பூ ரசம் செய்வது எப்படி?? Originally posted on The Subeditor Tamil

More Samayal recipes News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை