தோசைக்கு ஏற்ற சுவையான சின்ன வெங்காய சட்னி செய்வது எப்படி??

by Logeswari, Nov 18, 2020, 20:48 PM IST

வெங்காயம் என்றாலே மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. அதுவும் சின்ன வெங்காயம் என்றால் பல இயற்கையான சத்துக்கள் உள்ளது. சின்ன வெங்காயத்தில் முடி வளர்ச்சி, உடல் ஆரோக்கியம் போன்ற நன்மைகளை இலவசமாக பெறலாம். சின்ன வெங்காயம் பெரிய வித்தியாசம்.. சரி வாங்க சுவையான சின்ன வெங்காய சட்னி செய்வது குறித்து பார்க்கலாம்..

தேவையான பொருள்கள்:-
சின்ன வெங்காயம் - 20
காய்ந்த மிளகாய் - 7
தக்காளி - 1
உப்பு - தேவையான அளவு
புளி - சிறிதளவு
பூண்டு - 8 பற்கள்
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
தண்ணீர்- தேவையான அளவு

செய்முறை:-
முதலில் காய்ந்த மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி, புளி மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவை வைத்து தொக்கு பதத்திற்கு தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து மைய அரைத்து கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் விடவும். எண்ணெய் காய்ந்தவுடன் அதில் கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொண்டு மிக்சியில் அரைத்த கலவையை சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை கிளறி விடவும்.

15 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.சுவையான சின்ன வெங்காய சட்னி தயார்..

More Samayal recipes News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை