வெள்ளரிக்காய் கூட்டை இப்படி செய்து பாருங்கள்.. சுவையாக இருக்கும்..

by Logeswari, Nov 27, 2020, 20:41 PM IST

உடலுக்கு தினமும் ஆரோக்கியம் தருவது காய்கறிகள் தான்.அதலில் ஒன்று வெள்ளரிக்காய். இதில் தண்ணீர் சத்து அதிகம் உள்ளதால் உடலில் நீர் சத்து குறையாமல் பாதுகாத்து கொள்கிறது. அப்படிப்பட்ட வெள்ளரிக்காயில் சுவையாக கூட்டு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்..

தேவையான பொருள்கள்:-
வெள்ளரிக்காய் -2
கடலைப்பருப்பு -1 கப்
வெங்காயம் -1
தக்காளி - 1
பூண்டு -3 பல்
இஞ்சித்துருவல் -1 ஸ்பூன்
தனியா தூள் -1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் -1/4 ஸ்பூன்
பச்சைமிளகாய்- 1
மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
சீரகம்-1/4 ஸ்பூன்
எண்ணெய் -2 ஸ்பூன்
கொத்தமல்லி-சிறிதளவு

செய்முறை:-
முதலில் வெள்ளரிக்காயில் தோலை சீவி சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். தக்காளி, வெங்காயம் போன்றவற்றையும் நறுக்கி கொள்ளவும். கடலை பருப்பை ஒரு 45 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும். அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து தாளித்து கொள்ளவும்.

பிறகு பூண்டு, இஞ்சித்துருவலை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். சிறிது நேரம் பிறகு வெங்காயம், தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள் சேர்த்து கலக்கவும்.

ஊற வைத்த பருப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 2 விசில் வரும் வரை காத்திருங்கள். கடைசியில் கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் சுவையான வெள்ளரிக்காய் கூட்டு தயார்..

You'r reading வெள்ளரிக்காய் கூட்டை இப்படி செய்து பாருங்கள்.. சுவையாக இருக்கும்.. Originally posted on The Subeditor Tamil

More Samayal recipes News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை