ஸ்பெஷலான சோயா பீன்ஸ் அடை செய்வது எப்படி?? செம கலக்கல் டேஸ்ட்..!

by Logeswari, Nov 30, 2020, 20:01 PM IST

பல வகையான அடையை ருசித்து இருப்போம்.. அதுபோல ஸ்பெஷலாக சோயா பீன்ஸில் சுவையான அடை எப்படி செய்வது குறித்து பார்க்கலாம். இது கண்டிப்பாக குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். தவறாமல் சமைத்து பரிமாறுங்கள்..

தேவையான பொருள்கள்:-
பச்சரிசி - 1 கப்
இட்லி அரிசி - 1 கப்
கடலைப்பருப்பு -1/2 கப்
துவரம்பருப்பு - 1/2 கப்
சோயா பயறு - 1/2 கப்
பாசிப்பருப்பு - 3 ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 7
பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 1/4 கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:-
முதலில் பச்சரிசி, இட்லி அரிசி, து.பருப்பு, க.பருப்பு, பாசி பருப்பு மற்றும் சோயா பயறு ஆகியவை குறிப்பிட்ட அளவில் சுமார் 3 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு மிளகாய் வற்றல், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கறிவேப்பிலை ஆகியவையுடன் ஊறவைத்த அரிசி மற்றும் பருப்புடன் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.

அரைத்த மாவுடன் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். பின்னர் அடுப்பில் தோசை கல் வைத்து சூடான பிறகு மாவை அடை போல் தட்டி கொள்ளவும். இருபுறமும் நன்றாக வேக எண்ணெய் ஊற்றி கொள்ளவும். சூடான சோயா பீன்ஸ் அடை தயார்..

You'r reading ஸ்பெஷலான சோயா பீன்ஸ் அடை செய்வது எப்படி?? செம கலக்கல் டேஸ்ட்..! Originally posted on The Subeditor Tamil

More Samayal recipes News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை