தோசையில் பல வித உணவுகளை சொடக்கு போடும் நேரத்தில் செய்துவிடலாம். அந்த பட்டியலில் ஒன்று மரவள்ளி கிழங்கு தோசை. இது பல பேர் கேள்விபட்டு இருப்பது அரிது தான். இதில் பல மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி ஒளிந்து இருக்கிறது. சரி வாங்க மரவள்ளி தோசை செய்வது குறித்து காணலாம்..
தேவையான பொருள்கள்:-
பச்சரிசி 1/4 கிலோ
மரவள்ளிக் கிழங்கு 1/4 கிலோ
பச்சை மிளகாய் 3
சீரகம் 1 ஸ்பூன்
வெந்தயம் 1 ஸ்பூன்
செய்முறை:-
முதலில் பச்சரிசியுடன் வெந்தயத்தை ஒரு 3 மணி நேரம் ஊற வைக்கவும். மரவள்ளி கிழங்கில் உள்ள தோலை சீவி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பிறகு அரிசி, சீரகம், வெந்தயம், பச்சை மிளகாய் போன்றவற்றை சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
நறுக்கி வைத்த மரவள்ளி கிழங்கை மிக்சியில் அரைத்து மாவில் சேர்த்து கொள்ளவும். அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடான பிறகு மாவை ஊற்றவும். தோசை நன்றாக வேக சுற்றி எண்ணெயை ஊற்றவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக மாறியவுடன் மரவள்ளி கிழங்கு தோசையை சூடாக பரிமாறுங்கள்...