நெல்லிக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு பல வித நன்மைகள் கிடைக்கிறது. முடி கருமை பெறுதல், வயிற்று போக்கு சீர் செய்தல் என பல நன்மைகளை சொல்லி கொண்டே போகலாம். சரி வாங்க நெல்லிக்காய் துவையலை எப்படி செய்வது குறித்து பார்க்கலாம்..
தேவையான பொருள்கள்:-
நெல்லிக்காய் - 1 கப்
உ.பருப்பு -100 கிராம்
காய்ந்த மிளகாய் - 10
தேங்காய் துறுவல் - அரை கப்
பெருங்காயம் - 1 துண்டு
கடுகு- 1 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
கருவேப்பிலை-சிறிதளவு
செய்முறை:-
முதலில் நெல்லிக்காயில் உள்ள கொட்டையை எடுத்து துருவி எடுத்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்த பிறகு கடுகு, பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
பின்னர் துருவிய நெல்லிக்காய், தேங்காய் மற்றும் பெருங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு வதக்கிய கலவையை ஆறவைத்து மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும். அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த நெல்லிக்காய் துவையலை சேர்த்து நன்கு பிரட்டவும்.
ஒரு 10 நிமிடத்திற்கு பிறகு இறக்கி விடவும்.. சுவையான நெல்லிக்காய் துவையல்.இதனை வாரத்திற்கு 2 முறை எடுத்துக்கொண்டால் உடலுக்கு நல்லது.