சிலருக்கு காலையில் இட்லி, தோசை, பொங்கல் என வகை வகையாக சாப்பிட பிடிக்கும். அதுவும் பொங்கல் சாப்பிட்டால் வடை சாப்பிட தோன்றும். ஹோட்டல் ஸ்டைல் பொங்கல் நம்ம இனிமே வீட்டிலே செய்து அசத்தலாம். சரி வாங்க நெய் மணக்க மணக்க வெண் பொங்கல் செய்வது எப்படி குறித்து பார்க்கலாம்..
தேவையான பொருள்கள்:-
பச்சரிசி - 2 கப்
பாசிப்பருப்பு - 1 கப்
பொடித்த இஞ்சி - 1 ஸ்பூன்
மிளகு -2 ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
நெய் - 1/4 கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
முந்திரி- 3 ஸ்பூன்
செய்முறை:-
அடுப்பில் வாணலியை வைத்து அதில் பாசிப்பருப்பை நன்றாக வறுத்து கொள்ள வேண்டும். பின்பு பச்சரிசி மற்றும் பாசி பருப்பை சுத்தமான நீரில் கழுவி குக்கரில் போட்டு 2 கப் அரிசிக்கு 6 இல் இருந்து 7 கப் வரை தண்ணீர் ஊற்றி குக்கரை மிதமான சூட்டில் வேக வைக்கவும்.
3 விசில் வரும் வரை காத்து இருக்கவும். பின்னர் விசில் அடங்கியவுடன் குக்கரை திறந்து பொங்கலை நன்றாக கலக்கி கொள்ளவும். பருப்பை வறுத்த வாணலியில் நெய் ஊற்றி அதில் மிளகு, கறிவேப்பிலை, சீரகம், முந்திரி பருப்பு, இஞ்சி ஆகிவை சேர்த்து தாளித்து கொள்ளவும்.
தாளித்த பொருளை பொங்கலில் சேர்த்து நன்றாக கலக்கி விடவும். சுவையான பொங்கல் தயார். இதனுடன் கத்தரிக்காய் கொஸ்த்து சேர்த்து சாப்பிட்டால் பொங்கல் தேவாமிர்தமாய் இருக்கும்..