ஆவி பறக்கும் சாதத்தில், நெய் விட்டு உளுந்தம் பொடி சேர்த்து சாப்பிட்டால் சுவை அள்ளும்..

by Logeswari, Dec 24, 2020, 13:18 PM IST

நாம் சில ஹோட்டலுக்கு சென்றால் முதலில் சாப்பாட்டிற்கு உளுந்தம் பொடி, நெய் ஆகியவை தான் இடப்பெறும். சில ஹோட்டல் உளுந்தம் பொடிக்கு என்றே பெயர் போனது. சரி வாங்க ஹோட்டலில் கிடைக்கும் உளுந்தம் பொடி போல நம்ம இனிமேல் வீட்டிலே செய்து அசத்தலாம்..

தேவையான பொருள்கள்:-
வடித்த சாதம் - 2 கப்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
நெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
உளுந்தம் பருப்பு - 4 ஸ்பூன்
துவரம் பருப்பு - 1 ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 2 ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 8
பெருங்காயத் தூள் - 1/2 ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்

செய்முறை:-
முதலில் தேங்காயை துருவி கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் கடாயை வைத்து துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, துருவின தேங்காய், மிளகாய் வற்றல், ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வறுத்து கொள்ளவும். பிறகு வறுத்த கலவையை ஆற விட்டு மிக்சியில் பொடியாக அரைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காய தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொண்டு உளுந்தம் பொடியில் சேர்த்து கொள்ளவும். பின்னர் தட்டில் சூடான வடித்த சாதத்தை இட்டு அதில் நெய், பொடித்த உளுந்தம் பொடி, எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து கலந்து சாப்பிட்டால் சுவை சும்மா அள்ளும்..

You'r reading ஆவி பறக்கும் சாதத்தில், நெய் விட்டு உளுந்தம் பொடி சேர்த்து சாப்பிட்டால் சுவை அள்ளும்.. Originally posted on The Subeditor Tamil

More Samayal recipes News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை