கறிவேப்பிலையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. இதனால் முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை மேன்மை அடையும். சரி வாங்க கறிவேப்பிலை சாதத்தை எப்படி செய்வது குறித்து பார்க்கலாம்..
தேவையான பொருள்கள்:-
பச்சரிசி -1 கப்
உப்பு -தேவையான அளவு
நெய் -3 ஸ்பூன்
கறிவேப்பிலை -தேவையான அளவு
உளுத்தம் பருப்பு -1 ஸ்பூன்
மிளகு -1/2 ஸ்பூன்
சீரகம் -1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/2 ஸ்பூன்
எண்ணெய் -1 ஸ்பூன்
கடுகு -1/2 ஸ்பூன்
செய்முறை:-
முதலில் பச்சரிசியை உதிரியாக வடித்து கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றவும். சூடான பிறகு கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு, மிளகு, சீரகம், பெருங்காயத்தூள் போன்றவற்றை சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும்.
வறுத்த பொருள்களை சிறிது நேரம் ஆறவிட்டு மிக்சியில் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். பிறகு வடித்த சாதத்தில் அரைத்த பொடியை சேர்த்து கிளறவும். அதே கடாயில் நெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம் பருப்பு ஆகியவை சேர்த்து தாளித்து கிளறிய சாதத்தில் ஊற்றவும்.