காரமான குழி பணியாரம் செய்வது எப்படி?? வாங்க சமைக்கலாம்..

நம் கிராமத்தில் இருந்து பிறந்தது தான் குழி பணியாரம். இதனை குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பார்கள். குளிர்காலத்தில் இதனை மாலை டிபனாக செய்து சாப்பிடுவார்கள். பணியாரத்தில் நிறைய வகைகள் உள்ளன. அதில் நாம் காரசாரமான பணியாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை பார்ப்போமா!

தேவையான பொருள்கள்:-
தோசை/இட்லி மாவு-3 கப்
வெங்காயம்-1
பச்சை மிளகாய்-2
உளுத்தம் பருப்பு-1 ஸ்பூன்
மிளகாய் தூள் -1சிட்டிகை
பெருங்காயம்-1சிட்டிகை
தேங்காய் -1 ஸ்பூன்
கருவேப்பிலை-தேவையான அளவு
உப்பு-தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு
கொத்தமல்லி-தேவையான அளவு

செய்முறை:-
ஒரு கிண்ணத்தில் தோசை அல்லது இட்லி மாவுடன் வெங்காயம், காரத்திற்கு பச்சை மிளகாய், உளுத்தம் பருப்பு, மிளகாய் தூள், பெருங்காயம்,துருவிய தேங்காய், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து மாவை மிருதுவாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு பணியாரம் செய்யும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து குழியில் எண்ணெய் ஊற்ற வேண்டும்.

எண்ணெய் சூடாகிய பிறகு மாவை குழியில் ஊற்றி இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேக வைக்க வேண்டும். 10 நிமிடத்தில் கார குழி பணியாரம் ரெடி. ரெடியான காரசாரமான பணியாரத்தை தட்டில் வைத்து அதன் மேல் வாசனைக்காக கொத்தமல்லியை அலங்கரித்து குழந்தைகளுக்கு பரிமாறுங்கள்.

Advertisement
மேலும் செய்திகள்
how-to-cook-andra-pepper-chicken
காரசாரமான சுவையான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் ரெசிபி..! சூப்பர் டேஸ்ட்.. மிஸ் பண்ணிடாதீங்க
how-to-make-kovaikkai-masalapath-recipe
சுவையான கோவைக்காய் மசாலாபாத் செய்வது எப்படி?? வாங்க பார்க்கலாம்..
how-to-cook-cauliflower-soup
அருமையான வெயிட் லாஸ் ட்ரிங்க்! காலிஃபிளவர் சூப் செய்வது எப்படி? வாங்க சமைக்கலாம்..
how-to-make-saththu-mavu
இனி வீட்டிலே சத்துமாவு தயாரிக்கலாம்! கெமிக்கல் கலந்த மாவுக்கு குட்பை சொல்லுங்கள்..
how-to-make-pepper-chicken
காரசாரமான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் செய்வது எப்படி??
how-to-make-ragi-samiya-cutlet
சுவையான ராகி சேமியா கட்லெட் செய்வது எப்படி??
how-to-make-rava-potato-finger-fry
சுவையான.. கிரிஸ்பியான.. ரவா உருளைக்கிழங்கு ஃபிங்கர் ஃபிரை செய்வது எப்படி?
how-to-make-cucumber-pachadi
உடல் எப்பொழுதும் குளு குளுன்னு இருக்க இதை சாப்பிடுங்க..!
how-to-make-neem-tea
சர்க்கரை நோய் முழுவதும் குணமாக வேப்பம் டீ குடியுங்க..
how-to-make-capsicum
சப்பாத்திக்கு ஏற்ற குடைமிளகாய் தொக்கு செய்வது எப்படி??

READ MORE ABOUT :