பெண்கள் மேற்படிப்புக்கான கல்வி உதவித்தொகை... எப்படி விண்ணப்பிப்பது? AICTE வழங்கும் பெண் மாணவிகளுக்கான உதவித்தொகை!

by Loganathan, Sep 4, 2020, 14:47 PM IST

பெண்கள் தொழில்நுட்ப கல்வி பயிலுவதற்காக உதவும் வகையில் AICTE ன் மூலம் நிறுவப்பட்டு வழங்கப்படும் உதவித்தொகை திட்டம் தான் PRAGATI .கல்வியால் மட்டுமே பெண்களுக்கான அதிகாரத்தைப் பெற்றுத் தர முடியும்.மேலும் அவர்களின் அறிவு , திறமை மற்றும் தன்னம்பிக்கை போன்றவற்றை முன்னேற்றமடையச் செய்யக் கல்வி மட்டுமே ஒரு பிரதான கருவியாகும். இதன் நோக்கம் "தொழில்நுட்ப கல்வி மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல்" என்ற கோட்பாட்டில் தொடங்கப்பட்டது.

உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள்

1.பெண் உறுப்பினர் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு அல்லது நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை பெற்று இருக்க வேண்டும்.

2.ஒரு குடும்பத்தில் 2 பெண் குழந்தைகளுக்கு இந்த உதவித்தொகையைப் பெறலாம்.

3.ஆண்டு வருமானம் 8 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஆண்டிற்கு 5000 பெண் பட்டதாரிகளுக்கு இந்த உதவித்தொகையைத் தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் பெறாத பட்சத்தில் அந்த உதவித்தொகை எண்ணிக்கை அனைத்தும் பட்டைய பாடத்தில் இணைந்த மாணவிகளுக்கு மாற்றப்படும்.

இந்த 5000 விண்ணப்பத்தில் 13 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து விண்ணப்பிக்கும் அனைவரின் விண்ணப்பங்களும் ஏற்கப்படும்.

உதவித்தொகையின் அளவு

* ஆண்டிற்கு 50000 ரூபாய் உதவித்தொகை அளிக்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

National Scholarship Portal எனும் வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தை மாணவிகள் பயிலும் கல்லூரிகள் சரிபார்க்க வேண்டும்.

இந்திய அரசாங்கத்தின் இட ஒதுக்கீடு இந்த திட்டத்திற்கும் பின்பற்றப்படும்.

இட ஒதுக்கீட்டீல் SC மற்றும் ST வகுப்பினரின் போதிய விண்ணப்பங்கள் வராத பட்சத்தில் அந்த விண்ணப்பங்கள் பொது இடத்திற்கு மாற்றப்படும்.

மாணவிகள் வேறு ஏதாவது உதவித்தொகை பெற்றால் இந்த உதவித்தொகை அனைத்தும் திரும்பப் பெறப்படும்.

மேலும் விவரங்களுக்கு www.aicte.org.in என்ற தளத்தைத் தொடர்பு கொள்ளவும்.

READ MORE ABOUT :

More Education News

அதிகம் படித்தவை