கோலி, ஸ்டீவ் ஸ்மித்துக்கு டாடா சொன்ன நியூசி கேப்டன்.. கேன் வில்லியம்சனின் தரமான சாதனை!

by Sasitharan, Dec 31, 2020, 20:40 PM IST

மும்பை: இந்திய அணி கேப்டன் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான பேட்டிங் தரவரிசையில் கேன் வில்லியம்சன் முதலிடம் பிடித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி நியூசிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தன் மூலம் 890 புள்ளிகள் பெற்று உலகின் முதல் நிலை பேட்ஸ்மேனாக கேன் வில்லியம்சன் சாதனை படைத்துள்ளார். இதற்கு அடுத்து வரிசையாக, இந்திய அணி கேப்டன் விராட் கோலி 879 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திலும், ஸ்டீவ் ஸ்மித் 877 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளனர். பட்டியலில் இந்திய வீரர் அஜின்கியா ரகானே 784 புள்ளிகள் பெற்று 6 வது இடத்தில் உள்ளார். இதனைபோன்று, இந்திய வீரர் செதேஷ்வர் புஜாரா 728 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தில் உள்ளார்.

இந்திய கிரிக்கெட் கேப்டன் நாடு திரும்பியுள்ளதால், ஆஸ்திரரேலியாவிற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ளார். இந்தியாவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் 4 இன்னிங்ஸ் விளையாடி மொத்தம் 10 ரன்களை மட்டுமே ஸ்மித் எடுத்தார். இதன் காரணமாகவே, வில்லியம்சன் புள்ளிகளில் முன்னேறி முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், கேன் வில்லியம்சனை கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

You'r reading கோலி, ஸ்டீவ் ஸ்மித்துக்கு டாடா சொன்ன நியூசி கேப்டன்.. கேன் வில்லியம்சனின் தரமான சாதனை! Originally posted on The Subeditor Tamil

More Cricket News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை