சிறப்பான பந்துவீச்சாளர் தான்... ஆனால்?!.. நடராஜன் குறித்து டேவிட் வார்னர்

by Sasitharan, Jan 2, 2021, 20:42 PM IST

நடராஜனை 100 சதவிதம் நம்ப முடியாது என டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றனர். இதற்கிடையே, இந்திய அணியில் இடம் பெற்றிருந்த வேகபந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனையடுத்து உமேஷ் யாதவ்விற்கு பதிலான தமிழக வீரர் நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில்,நடராஜன் டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துவீச சரியானவரா என்பதற்கு ஆஸ்திரேலியாவின் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர் பதில் அளித்துள்ளார். இது தொடர்பான 2 கேள்விகளுக்கு பதிலளித்த டேவிட் வார்னர், நடராஜன் நல்ல லைனில் சிறப்பாக பந்து வீசுபவர். இருப்பினும் அவர் பந்துவீச்சு டெஸ்ட் போட்டியில் எந்த அளவுக்கு எடுபடும் என்று தெரியவில்லை என்றார்.

அடுத்தடுத்து பந்து வீசும் போது ஒரே லைனை அவர் எப்படி கேரி செய்வார் என்பதை எல்லாம் பார்க்க வேண்டி உள்ளது. ஆனால் அதை 100 சதவிகிதம் உறுதியாக சொல்லிவிட முடியாது என்றும் தெரிவித்தார். டேவிட் வார்னரும், நடராஜனும் டி20 ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading சிறப்பான பந்துவீச்சாளர் தான்... ஆனால்?!.. நடராஜன் குறித்து டேவிட் வார்னர் Originally posted on The Subeditor Tamil

More Cricket News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை