கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த 14-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இன்று தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் ஆட்டத்தின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஐபிஎல் போட்டியை நேரில் கண்டு களிக்க ரசிகர்களுக்கு அனுமதியில்லை. கடந்தாண்டு போலவே பார்வையாளர்கள் இல்லாமல் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
ட்விஸ்ட் :
சென்னை சேப்பாக்கம் மைதானம் பொதுவாக ஸ்பின்னர்களுக்கு சாதமாக இருக்கும். இதனால் தான் சிஎஸ்கே நிர்வாகம் ஸ்பின்னர்களாக பார்த்து அணியில் சேர்ந்துக்கொள்ளும். உதாரணமாக முத்தையா முரளிதரன்,ஹர்பஜன் சிங், ரெய்னா, ஜடேஜா, இம்ரான் தாஹீர் என சிஎஸ்கேவில் ஆடிய, ஆடிக்கொண்டிருக்கும் ஸ்பின்னர்ஸ் ஏராளம். இந்த முறை எந்த அணிக்கு ஹோம் கிரவுண்டில் ஆடும் வாய்ப்பு கிடையாது என பிசிசிஐ அறிவித்தது.
இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான போட்டி சென்னையில் கிடையாது என்பது உறுதியாகியுள்ளது. சிஎஸ்கே மேட்ச் எல்லாம் டெல்லி, மும்பை மைதானங்களில்தான் நடக்கவுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் சேப்பாக்கத்தில் ஆடவில்லை என்பதால், பிட்சை மாற்ற நினைத்தார்கள் போல. அதனால் ஒரு புதிய மாற்றத்தை செய்துள்ளனர். எப்போதும் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் பிட்ச் மாற்றம் செய்யப்பட்டதிலிருந்து கருப்பு நிறத்தில் இருக்கிறது. இதனால் ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு கடும் சவால் அதிகரித்துள்ளது.
ஆர்.சி.பி-யின் ஆஸ்தான ஸ்பின்னர் சாஹல்-க்கு இந்த ட்விஸ்ட் வருத்தமாத்தான் இருக்கும். ஸ்பின்னிங் டிராக்கை யோசித்து ஆர்.சி.பி, மும்பை வியூகங்கள் வகுத்திருந்தால் அவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமே. இந்த கருப்பு நிற பிட்சில் பந்து டெர்ன் ஆகாது என கூறப்படுகிறது. இது இரண்டு அணிகளுக்குமே சவாலானதாகத் தான் இருக்கும். முதல் போட்டியை எந்த அணி வெற்றியுடன் தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். அந்த வகையில் முதலில் மும்பை அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. யார் வெற்றி பெறுவார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.