2016-ம் ஆண்டு 'கிரிக் பார்ட்டி' என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், 2018-ம் ஆண்டு "சலோ" என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகியுள்ளர். பின்னர் அதே ஆண்டு இவர் நடித்து வெளிவந்த 'கீதா கோவிந்தம்' என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் பிரபலமானவர். நடிகர் விஜய் தேவரகொண்டா உடனான கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்த நிலையில், ராஷ்மிகாவுக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இதன் பிறகு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட வேறு மொழி திரைப்படங்களிலும் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.
ராஷ்மிகா மந்தண்ணா 2019-ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் பிகில் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக வெளிவந்த தகவலை தொடர்ந்து இவரின் பெயர் தமிழில் பிரபலமாக பரவியது. ஆனால் ராஷ்மிகா பிகில் திரைப்படத்தில் நடிக்கவில்லை என்று அறிந்ததும் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதையடுத்து, நடிகர் கார்த்தி நடித்த சுல்த்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே சிவகார்த்திகேயனின் எஸ் கே 17, டியர் காம்ரேட் என தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில், லைவ் வீடியோவில், ராஷ்மிகா கூறிய விஷயம் ஒன்று, ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
லைவ் வீடியோவில் ராஷ்மிகா இருந்த போது, ரசிகர் ஒருவர் அவரிடம், 'உங்களின் பேவரைட் ஐபிஎல் அணி எது?' என்ற கேள்வியை எழுப்பினார். இதற்கு பதிலளித்த ராஷ்மிகா, 'ஈ சாலா கப் நம்தே' என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஸ்லோகனை குறிப்பிட்டார். இதனால், ஆர்சிபி அணியின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.