திமுக தலைவர் ஸ்டாலினை பிரிட்டிஷ் துணைத் தூதர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இன்று சந்தித்து பேசினர்.
மு.க.ஸ்டாலினை இன்று ஆழ்வார்பேட்டை இல்லத்தில், இந்தியாவிற்கான பிரிட்டிஷ் தூதரகத்தின் அரசியல் மற்றும் இருதரப்பு உறவுகளின் தலைவர் ரிச்சர்ட் பர்லாவ் (Richard Barlow), இந்தியாவிற்கான பிரிட்டிஷ் துணை தூதர் ஜெரிமி பில்மோர்-பெட்போர்டு (Mr Jeremy Pilmore-Bedford), இலண்டனைச் சேர்ந்த வெளிநாடு மற்றும் காமன்வெல்த் நாடுகளின் தெற்காசிய அலுவலகத்தின் தலைவர் பெர்கஸ் அல்ட் (Mr Fergus Auld) ஆகியோர் நேரில் சந்தித்தனர்.
இச்சந்திப்பின் போது இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் சமூக - அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடினர்.
அப்போது, ரூடி பெர்னாண்டஸ் (Mr Rudy Fernandez) (தலைவர் – அரசியல், பொருளாதார மற்றும் பொது விவகாரத் துறை), திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான பொன்முடி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோர் உடனிருந்தனர்.