வலிமையான மேற்கு மண்டல அமைச்சரை வளைத்த விழியாள்- சாம்ராஜ்யத்தை வீழ்த்தப் போகும் கொங்கு தேச கல்லூரி!

கொங்கு நாட்டை மையமாக வைத்து இயங்கும் கல்லூரி அது. 10 years challenge புகைப்படங்களைப் போல அந்தக் கல்லூரியின் வளர்ச்சியை ஜூம் செய்து பார்த்து பெருமூச்சுவிடுகிறார்கள் கல்வித் தந்தைகள். அரசியல் புள்ளிகளின் பணத்தையெல்லாம் வெள்ளையாக மாற்றும் மையமாக மாறிவிட்டதாம் அந்தக் கல்லூரி.

தமிழ்நாடு அரசியலில் கோலோச்சும் முக்கியப் புள்ளி ஒருவரின் பிறப்பிடமே அந்தப் பகுதிதான். பவர் பாலிடிக்ஸால் மாவட்டத்தை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறார். கலெக்டர், கமிஷனர் என அவர் அனுமதியின்றி யாரும் பேசிவிடமாட்டார்கள். அப்படியும் எதாவது பேசிவிட்டால், அவர்கள் வாங்கிக் கொள்ளும் அர்ச்சனைகளை விவரிக்க வார்த்தைகளைத் தேட வேண்டியது வரும். அப்படிப்பட்டவர் கண்களில் விழுந்தார் அந்த 'விழி'யாள். பத்து வருடங்களுக்கு முன்பு மிகச் சாதாரணமாக இருந்த அந்தக் கல்லூரி இன்று தரச் சான்றுகளை அதிகம் வைத்திருக்கின்ற முக்கியக் கல்லூரியாக மாறியிருக்கிறது. இந்த வளர்ச்சியின் பின்னணியில் அந்த மாண்புமிகு இருக்கிறார். அந்த விழியாளும் ஒரு சாதாரண கிளார்க்காகத்தான் புகழ்பெற்ற கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்தார். கல்லூரி தாளாளர் காதலுக்காக ஒரு கொலை வழக்கில் சிறைக்குச் செல்ல, அதை தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டார்.

கல்லூரி கணக்கு வழக்குகளை சிறைக்குக் கொண்டு சென்றவர், ஒருகட்டத்தில் தாளாளரின் விருப்பத்துக்குரியவராக மாறினார். கல்லூரி நிர்வாகத்தில் முக்கிய பதவியில் அமர்த்தப்பட்டார். அவர் இல்லாவிட்டால் எதுவும் அசையாது என்ற நிலை வந்தது. சிறைக் காதல் நடந்து கொண்டிருந்தபோதே, கல்லூரி சொத்துக்களையும் தன்பக்கம் கொண்டு வந்துவிட்டார். அடுத்த சில வாரங்களில் சிறையில் தூக்கு மாட்டிக் கொண்டு தாளாளர் இறந்துவிட்டதாக பத்திரிகைகள் பக்கம் பக்கமாக செய்தி எழுதின.

அந்த விழியாளும் இன்னொரு கல்லூரியையும் தொடங்கினார். அங்குதான் அரசியல்வாதிகளின் பணப்புழக்கம் தொடங்கியது. யாருக்கு என்ன வேண்டும் என்பதை அறிந்து அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறார் விழியாள். பல ஆயிரம் கோடி ரூபாய்களும் இன்னபிற இத்யாதிகளும் கல்லூரியை மையமாக வைத்து இன்பத்தை வாரியிறைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த அரசியல் புள்ளியின் வாழ்க்கையும் இந்த இடத்தில் வீழப் போகிறது என கட்டியம் கூறிக் கொண்டிருக்கிறார்கள் கட்சி பொறுப்பாளர்கள்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!

READ MORE ABOUT :