குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை: மெரினாவில் போக்குவரத்து மாற்றம்

Republic Day Celebration Parade Rehearsal Transportation changed in Marina

by Isaivaani, Jan 19, 2019, 10:07 AM IST

சென்னை மெரினா கடற்கரை சாலையில் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுவதால் இன்று முதல் 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வரும் 26ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் சென்னை உள்பட பல முக்கிய நகரங்களில் செய்யப்பட்டு வருகிறது.
சென்னையை பொறுத்தவரையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் ஆண்டுதோறும் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. அணிவகுப்புக்கான ஒத்திகை நிழச்சியும் குடியரசு தின விழாவிற்கு முந்தைய நாட்களில் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. இதன் எதிரொலியால், இன்று முதல் மூன்று நாட்களுக்கு மற்றும் குடியரசு தினத்தன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

* காமராஜர் சாலையில், கலங்கரை விளக்கம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

* அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் சரக்கு மற்றும் வணிக வாகனங்கள் கிரின்வேஸ் சாலை சந்திப்பிலிருந்து ஆர்.கே மடம் சாலை, வி.கே.ஐயர் சாலை, தேவநாதன் சாலை, செயின்ட் மேரிஸ் சாலை, ராமகிருஷ்ணா மடம் சாலை, லஸ் சந்திப்பு, லஸ் சர்ச் சாலை, கற்பகாம்பாள் நகர், சிவசாமி சாலை, நீல்கிரீஸ் சந்திப்பு, மியூசிக் அகாடமி, ராயப்பேட்டை மருத்துவமனை, மணிக்கூண்டு, ஒயிட்ஸ் சாலை, ஸ்மித் சாலை, அண்ணா சாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.

பிராட்வே செல்லும் வழி

* அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் பிற வாகனங்கள் (மாநகர பேருந்துகள் உட்பட) சாந்தோம் நெடுஞ்சாலை மற்றும் கச்சேரி சாலை நோக்கி திருப்பப்படும். பின்னர் லஸ் சந்திப்பு, கற்பகாம்பாள் நகர், சிவசாமி சாலை நீல்கிரீஸ் சந்திப்பு, மியுசிக் அகடமி சந்திப்பு, ராயப்பேட்டை மருத்துவமனை, மணிக்கூண்டு, ஸ்மித் சாலை, அண்ணா சாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.

* டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் காந்தி சிலை நோக்கி செல்லும் மாநகர பேருந்து தடம் எண், ‘27 டி’ ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் வி.எம்.தெரு சந்திப்பில் ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக திருப்பி விடப்பட்டு, ராமகிருஷ்ணா மடம் சாலை, மந்தைவெளி சந்திப்பு, தெற்கு கெனால் பேங்க் ரோடு, சீனிவாசபுரம் வழியாக பட்டினப்பாக்கம் சென்றடையலாம்.

அண்ணாசாலை வழி

* மயிலாப்பூர் சந்திப்பிலிருந்து சிவசாமி சாலை வழியாக காந்தி சிலை நோக்கி வரும் மாநகர பேருந்து வழிதடம் எண், 21 ஜி ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மேம்பாலம் நோக்கி திருப்பி விடப்பட்டு, மணிக்கூண்டு, ஸ்மித் சாலை, அண்ணா சாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.

* மயிலாப்பூர் சந்திப்பிலிருந்து சிவசாமி சாலை வழியாக அண்ணா சதுக்கம் நோக்கி வரும் மாநகர பேருந்து வழித்தடம் 45 பி மற்றும் 12 ஜி ஆகியவை நீல்கிரீஸ் சந்திப்பு, மியுசிக் அகடமி சந்திப்பு, ராயப்பேட்டை மருத்துவமனை, மணிக்கூண்டு, ஸ்மித் சாலை, அண்ணா சாலை வாலாஜா சாலை வழியாக அண்ணா சதுக்கம் சென்றடையலாம்.

ஐஸ் அவுஸ் நோக்கி...

* டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் நடேசன் சாலை வழியாக திருப்பி விடப்படும்.

* டாக்டர் நடேசன் சாலை, அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு வழியாக காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஐஸ்அவுஸ் சந்திப்பு நோக்கி திருப்பி விடப்படும்.

* டாக்டர் பெசன்ட் சாலையிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பெசன்ட் சாலை ரவுண்டானாவில் ஐஸ்அவுஸ் நோக்கி திருப்பி விடப்படும்.

* பாரதி சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பாரதி சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் பெல்ஸ் ரோடு நோக்கி திருப்பி விடப்படும்.

* வாலாஜா சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் உழைப்பாளர் சிலை நோக்கி வரும் வாகனங்கள் (மாநகர பேருந்து தவிர்த்து) பெல்ஸ் ரோடு வழியாக திருப்பி விடப்படும், மாநகர பேருந்துகள் கெனால் சாலை சந்திப்பு வரை அனுமதிக்கப்படும்.

* அண்ணா சதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக வாலாஜா சாலை விருந்தினர் மாளிகை அருகில் மாற்றப்படும்.

அடையாறு சென்றடையலாம்

* பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக அடையாறு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் திருப்பி விடப்பட்டு ராஜா அண்ணாமலை மன்றம் வழியாக வாலாஜா பாயிண்ட், அண்ணா சாலை, அண்ணா சிலை, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு, ஒயிட்ஸ் ரோடு, அண்ணா சாலை, அமெரிக்க தூதரகம் சர்வீஸ் ரோடு, கதீட்ரல் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன், காரணீஸ்வரர் பகோடா தெரு சாந்தோம் சாலை வழியாக அடையாறு சென்றடையலாம்.

* வாலாஜா பாயிண்ட் மற்றும் அண்ணா சாலை சந்திப்பிலிருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் வர அனுமதியில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You'r reading குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை: மெரினாவில் போக்குவரத்து மாற்றம் Originally posted on The Subeditor Tamil

More District news News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை