ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தம் - 7லட்சம் அரசுஊழியர், ஆசிரியர்கள் பங்கேற்பு!

Jacto Geo Strike - 7 lakhs of government employees, teachers participating!

by Mathivanan, Jan 22, 2019, 11:36 AM IST

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது. 7 லட்சம் பேர் இப்போராட்டத்தில் குதித்துள்ளதால் அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக் டோ ஜியோ சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் இன்று தொடங்கியது.

வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் ஊதியம் கிடையாது என்று தமிழக அரசு எச்சரித்த நிலையில் 7 லட்சம் பேர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்தப் போராட்டத்தில் அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தேர்வு நெருங்கும் நேரத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களும் போராட் டத்தில் குதித்துள்ளதால் மாணவர்களின் படிப்பும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

You'r reading ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தம் - 7லட்சம் அரசுஊழியர், ஆசிரியர்கள் பங்கேற்பு! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை