வரும் நாடாளுமன்ற லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதாக வந்த தகவலுக்கு கரீனா கபூர் விளக்கம் அளித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களின் பலத்தை காட்ட தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் பாலிவுட் நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் சார்பில் போபால் தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியானது.
ஆனால் இது வெறும் வதந்தி என்று கரீனா கபூர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து கரீனா கபூர் கூறுகையில், தான் எப்போதும் சினிமாவில் தான் இருப்பேன். சினிமாவிற்கு மட்டுமே எனது முக்கியத்துவம். அரசியலில் இணையும் யோசனை எதுவும் இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. இதுதொடர்பாக நானும் யாரிடமும் அணுகவில்லை. எனது கவனம் முற்றிலும் சினிமாவில் மட்டுமே.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.