அஜித் விவகாரம்... என்னதான் மூக்குடைத்தாலும் தமிழிசையின் அடேங்கப்பா பில்டப்.. சைக்கிள் கேப்பில் ரஜினி மீதும் தாக்கு!

Tamilisai comments on Ajith Statement

by Mathivanan, Jan 22, 2019, 10:07 AM IST

நடிகர் அஜித் அரசியலுக்கு வரப்போவதில்லை என கூறியிருப்பதை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்றுள்ளார்.

திருப்பூரில் அஜித் ரசிகர்கள், பாஜகவில் இணைந்தனர். அப்போது பேசிய தமிழிசை சவுந்தரராஜன், அஜித் ரசிகர்கள் மோடியின் தொண்டர்களாக லோக்சபா தேர்தலுக்கு பணியாற்ற வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

ஆனால் நடிகர் அஜித்தோ, தமக்கு அரசியலில் துளியும் விருப்பம் இல்லை. தம் மீது அரசியல் முத்திரை விழுவதை விரும்பவில்லை என அறிக்கை மூலம் தமிழிசைக்கு நோஸ்கட் விட்டார்.

இதைபற்றியெல்லாம் கவலைப்படாத தமிழிசை சவுந்தரராஜன், சில நடிகர்கள் போல அரசியலுக்கு இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என்று சொல்லாமல் தெளிவான முடிவை அஜித் அறிவித்திருக்கிறார். நடிகர் அஜித் அரசியலுக்கு வரமாட்டேன் என தெளிவாக கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என தெரிவித்திருக்கிறார்.

You'r reading அஜித் விவகாரம்... என்னதான் மூக்குடைத்தாலும் தமிழிசையின் அடேங்கப்பா பில்டப்.. சைக்கிள் கேப்பில் ரஜினி மீதும் தாக்கு! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை