வடமாவட்டத்தில் பாமகவை வீழ்த்த பொதுத் தொகுதிகளில் வன்னியர்களையே வேட்பாளர்களாக நிறுத்த திமுக வியூகம் வகுத்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவோடு பாமக கூட்டணி அமைக்க இருப்பது பற்றிப் பேசிய திமுக மூத்த பொறுப்பாளர்கள், ' வடமாவட்டத்தில் அவர்களுக்கு செல்வாக்கு இருப்பது உண்மைதான். அவர்களை வெல்வதற்கு பொதுத்தொகுதிகளில் அதிகப்படியான வன்னியர் வேட்பாளர்களை போட்டால் போதும்' எனக் கூறியுள்ளனர். இதைப் பற்றி தேர்வுக்குழுவில் இருக்கும் துரைமுருகனிடமும் பேசியிருக்கிறார் ஸ்டாலின். ' பாமக போட்டியிடும் தொகுதிகளில் செல்வாக்கு மிகுந்த வன்னியர்களை வேட்பாளர்களாக நியமிக்க வேண்டும். அப்படிச் செய்தாலே போதும். கடந்த காலங்களில் வடமாவட்டத்தில் நமக்குக் கிடைத்த வாக்குகளைவிடவும் கூடுதலாகக் கிடைக்கும். தேர்தல் நெருக்கத்தில் வட மாவட்ட தொகுதிகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுப்போம்' எனக் கூறியிருக்கிறார் ஸ்டாலின்.
இந்தக் கருத்தை துரைமுருகனும் ஏற்றுக் கொண்டார். 'பாமக போட்டியிடும் தொகுதிகளில் மாம்பழத்தைக் கூழ் கூழாக்குவோம்' என மாவட்ட பொறுப்பாளர்கள் இப்போதே சபதம் எடுக்கத் தொடங்கிவிட்டார்களாம்.