அரசு ஆசிரியர்களுக்கும் தகுதி தேர்வு வைத்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: எஸ்.வி. சேகர் கொலவெறி ட்வீட்

The state teachers should also be eligible for disqualification: SV Shekhar Kolaveri tweeted

by Nagaraj, Jan 25, 2019, 10:09 AM IST

தங்களது ஊதியத்தில் இருந்து பிடித்த வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் ஆகியவற்றுக்காக அரசு ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பாஜகவின் எஸ்.வி.சேகர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அரசு ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியீடு” என பதிவிடப்பட்டிருந்தது.

இந்த ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்துள்ள எஸ்.வி.சேகர், அரசு ஆசிரியர்களுக்கும் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை தகுதிதேர்வு வைத்து தகுயில்லாதவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என கொந்தளிப்புடன் பதிவிட்டிருப்பது சர்ச்சையாகி உள்ளது.

You'r reading அரசு ஆசிரியர்களுக்கும் தகுதி தேர்வு வைத்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: எஸ்.வி. சேகர் கொலவெறி ட்வீட் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை