மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் எதிர் பார்த்த கூட்டமின்றி சேர்கள் காலியாக கிடந்தது. கூவிக்கூவி அழைத்தும் கூ ட்டம் சேரல...
அரசு விழாவுக்கு என கூட்டத்தை திரட்டி வருவார்கள் என்று பார்த்தால் அதிமுக மந்திரிகளும் கைவிரித்து விட்டார்கள் என்று சோகப்பாட்டு வாசிக்கின்றனர் தமிழக பாஜகவினர் . மதுரையின் கனவுத் திட்டமான எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வந்தது தாங்கள்தான் என தம்பட்டம் செய்து பலனை ஒட்டு மொத்தமாக அறுவடை செய்ய திட்டம் போட்டது தமிழக பாஜக . பிரதமர் மோடியை வைத்து எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவுடன் பாஜக தேர்தல் பிாச்சார பொதுக்கூட்டமும் ஒரே நாளில் நடத்துவது என்று முடிவானது.
அடிக்கல் நாட்டு விழா ஒரு இடத்திலும், பொதுக்கூட்டம் ஒரு நடத்தினால் கூட்டம் சேர்க்க முடியாது என்று இரண்டு நிகழ்ச்சியையும் ஒரே இடம், மேடை தான் வேறுவேறு என திடீர் முடிவும் எடுக்கப்பட்டது. எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவுக்கு தமிழக மந்திரிகள் பெரும் கூட்டத்தை அழைத்து வருவார்கள், அதை நமக்கு வந்த கூட்டம் போல காட்டி விடலாம் என்ற நப்பாசையில் மோடியின் வருகையை தம்பட்டம் அடித்து விளம்பரப்படுத்தினர் பாஜகவினர் .ஆனால் எய்ம்ஸ் விழாவை இடம் மாற்றிய கடுப்பில் இருந்த அதிமுக மந்திரி களும், நிர்வாகிகளும் ஒப்புக்கு தாங்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
பிரதமர் நிகழ்ச்சி என்பதால் பாதுகாப்பு கெடுபிடிகளை சாக்காக வைத்து அதிமுகவினர் கழன்று கொண்டு மக்களைத் திரட்டாமல் ஒதுங்கிக் கொண்டனர். பாஜக தரப்பிலும் சுற்றுப்புற கிராமங்களுக்கு வேன்களை அனுப்பி சாப்பாட்டு பொட்டலத்துடன் தலைக்கு ௹.200 என கூவிக்கூவி அழைத்தும் ஆட்கள் ஒரு சிலரே வண்டிகளில் ஏறிச் சென்றனர். இதனால் பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும் போது பெரும்பாலான சேர்கள் காலியாகவே கிடந்த தைக்கண்டு பாஜக நிர்வாகிகள் சோர்வடைந்து, கூவிக்கூவி அழைத்தும் கூ ட்டம் சேரல .... அதிமுக மந்திரிகளும் கூட்டம் சேர்க்க உதவல ... என சோகப்பாட்டு வாசிக்சின்றனர்.
இந்நிலையல் பிரதமர் மோடியை வரவேற்று பொதுக் கூட்ட மேடையில் தமிழிசை, சூரியனையே மறைக்கும் அளவுக்கு தாமரை மலர்ந்து விட்டது என்பது போல் கூட்டம் திரண்டுள்ளது என்ற பேச்சு தான் ஹைலைட் விஷயம்.