உடுமலை, பொள்ளாச்சி பகுதியில் சாதுவாக உலா வரும் சின்னத்தம்பி யானையை பிடித்து மீண்டும் வனப் பகுதியில் விட மாணிக்கம் என்ற கும்கி யானை வரவழைக்கப் பட்டுள்ளது.
சின்னத்தம்பி யானை கடந்த 3 நாட்களாக பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில் சாதுவாக உலா வருகிறது. யாரையும் அச்சுறுத்தாமல் உலா வரும் சின்னத்தம்பியை பிடிக்க வனத்துறையினர் தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால் ஓடிக்கொண்டே இருப்பதால் சோர்வாகி மடத்துக்குளம் அருகே மயங்கினான். ஆனால் சிறிது நேரத்தில் நடையைக் கட்டி விட்டான்.
கண்ணில் படுவது, திடீரென மறைந்து விடுவது சின்னத்தம்பி போக்குக் காட்டி வருகிறான். இதனால் முதுமலை பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்ட மாணிக்கம் என்ற கும்கி யானை உதவியுடன் வனத்துறையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். சின்னத்தம்பியை பிடித்து மீண்டும் டாப்சிலிப் வனப்பகுதியில் விடத் திட்டுமிட்டுள்ளனர்.