பாஜக கூட்டணி முயற்சிகளுக்கு ஆளும்கட்சியும் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டது. வேலுமணியும் தங்கமணியும் இதற்காக டெல்லிக்கு நடையாய் நடந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களை அச்சுறுத்தும் ஒரே விஷயம், தம்பிதுரை மட்டும்தான். அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த காலகட்டத்திலும் சசிகலாவிடம் பதவியைப் பெற்ற பிறகு டெல்லிக்கு விசுவாசமாய் எடப்பாடி நடந்து கொண்டது வரையில் அனைத்து ரகசியங்களையும் அறிந்த ஒரே மனிதர் தம்பிதுரை மட்டும்தான்.
பாஜகவோடு கூட்டணி வைப்பதை விரும்பாமல், அவர் தினகரன் பக்கம் போய்விட்டால் கதை கந்தலாகிவிடும் எனப் பயப்படுகிறார் எடப்பாடி பழனிசாமி. தேர்தல் நெருக்கத்தில் சசிகலா மீதான பாசத்தில் அந்தப் பக்கம் தம்பிதுரை போய்விட்டால், அதிமுகவின் உள்விவகாரங்கள் உள்பட கட்சியின் சின்னம் உள்பட பல்வேறு விஷயங்களுக்காக அவரும் போராடத் தொடங்கிவிடுவார்.
எனவே, எப்படியாவது தம்பிதுரையை வழிக்குக் கொண்டு வந்துவிட வேண்டும் என சீனியர்கள் படாதபாடுபட்டு வருகிறார்களாம்.
அருள் திலீபன்